பள்ளிக்கு தாமதமாக பணிக்கு வந்த ஆசிரியர்களுக்கு சம்பளம் கட்: மாவட்ட நிர்வாகம் அதிரடி
திருவண்ணாமலை: பள்ளிக்கு தாமதமாக பணிக்கு வந்த ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளுக்கு பணியாற்றும் ஆசிரியர்கள் நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை என பரவலான புகார்கள் எழுந்தது.
இதையடுத்து, உரிய நேரத்தில் பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை தர வேண்டும் என மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா உத்தரவிட்டார். ஆனாலும் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் மிகவும் காலதாமதமாக வந்தனர். இந்நிலையில், ஆரணி தாலுகா கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று காலை 9 மணிக்கு முதன்மை கல்வி அலுவலர் சுகன்யா திடீர் ஆய்வு நடத்தினார்.
பள்ளி தொடங்கி பின், 15 நிமிடங்கள் தாமதமாக 9 ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தனர். அவர்களை வருகை பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிக்க கூடாது என தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணனுக்கு சுகன்யா உத்தரவிட்டார்.
மேலும், தாமதமாக பணிக்கு வந்த 9 ஆசிரியர்களுக்கு ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்து முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டார். முதன்மை கல்வி அதிகாரியின் அதிரடி நடவடிக்கை மாவட்டம் எங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications