ரூ.25 லட்சம் கேட்டு தொழிலதிபர் மகன் கடத்தல்
சிவகாசி: சிவகாசியில் மாணவர் கடத்தலில் வடமாநில கும்பல் தொடர்பு இருக்குமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் போலீஸ் சரகம் எஸ்எஸ்புரம் சிவாஜி நகரை சேர்ந்தவர் ரமேஷ் பாண்டியன்.
சிவகாசி ஓன்றிய எம்ஜிஆர் மன்ற இணை செயலாளரான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும், கோடீஸ்வரன், விஜய், தங்கபிரபு ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இவர்களில் கோடீஸ்வரன் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுபபு படித்து வருகிறார்.
கடந்த 30ம் தேதி காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற அவன் இரவு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ்பாண்டியன் குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடினர். ஆனால் கோடீஸ்வரன் எங்கும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு ரமேஷ்பாண்டியன் செல்போனில் இந்தியில் இருவர் பேசினர். இந்தி தெரிந்த நண்பர் சீனிவாசன் மூலம் ஏற்கனவே அழைக்கப்பட்ட செல்போன் எண்ணில் பேசினர். அப்போது எதிர்முனையில் பேசியவர் ரூ.25 லட்சம் கொடுத்தால் தான் மாணவரை விடுவிப்போம் என மிரட்டினர். மேலும் குறிப்பிட்ட வங்கியின் கணக்கு எண் 70923007977718-ஐ கொடுத்து அதில் ரூ.25 லட்சம் செலுத்த கூறினர். மதியம் 1.30 மணிக்கு பேசிய மர்ம நபர் வங்கியில் இன்னும் பணம் போடவில்லையா, என மிரட்டலாக கேட்டு விட்டு போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டான்.
மகன் கோடீஸ்வரன் கடத்தல் சம்பவம் குறித்து ரமேஷ்பாண்டியன் திருத்தங்கல் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் கடத்தப்பட்ட மாணவரை மீட்க விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு நஜ்மல்ஹோடா, திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், சிவகாசி டவுன் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் ராமசாமி ஆகியோரை கொண்ட 3 தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
இந்த தனிப்படை போலீசார் மாணவரை கடத்தி மிரட்டும் கும்பல் யார், என விசாரணையை தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications