ஈரோட்டில் லாட்ஜ் உரிமையாளர்களுக்குள் சண்டை-துப்பாக்கியால் சுட்ட நபர் கைது
ஈரோடு: ஈரோட்டில் லாட்ஜ் உரிமையாளர் மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,
ஈரோட்டைச் சேர்ந்த குருசாமி மேட்டூர் ரோடு அபிராமி தியேட்டர் எதிரில் லாட்ஜ் நடத்தி வருகிறார். இவர் ஈரோடு பஸ் நிலையம் அருகே லாட்ஜ் நடத்தி வருபவரும் பைன்சியருமான விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான வைரவேலிடம் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.
ஸ்டேட் வங்கியில் வாங்கிய ரூ. 1 கோடி கடனை அடைக்க குருசாமிக்கு ரூ. 1 கோடி தருவதாகக் கூறிய வைரவேல், முதல் தவணையாக ரூ. 5 லட்சத்தைத் தந்தார்.
இந்தக் கடனுக்கு வட்டி கட்டி வந்த குருசாமி, வாங்கிய கடனை மொத்தமாக திருப்பி செலுத்தி விடுவதாகவும், லாட்ஜின் மீது எழுதி கொடுத்த பவர் பத்திரத்தை திரும்ப கொடுக்குமாறும் வைரவேலிடம் கூறினார்.
ஆனால், எனக்கு பவர் பத்திரத்தில் எழுதி கொடுத்தபடி, லாட்ஜை கொடுத்து விடு என்று குருசாமியை வைரவேல் மிரட்டியதால் தகராறு ஏற்பட்டது.
இந் நிலையில் இரு தினங்களுக்கு முன் குருசாமியின் லாட்ஜுக்கு வந்த வைரவேல், பவர் பத்திரத்தில் எழுதி கொடுத்தபடி லாட்ஜை எனக்கு எழுதி கொடுத்து விடு என்று கூறி தகராறு செய்தார்.
இதையடுத்து வைரவேல் மீது புகார் செய்ய குருசாமி, ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.
இதனால் கோபமடைந்த வைரவேல் தனது கைத் துப்பாக்கியால் லாட்ஜில் இருந்த குருசாமியின் மகன் பிரகாஷை சுட முயன்றார். சுதாரித்து கொண்ட பிரகாஷ், வைரவேலின் கையைத் தட்டி விட்டார். இதனால் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய இரண்டு தோட்டாக்கள், லாட்ஜின் வரவேற்பு அறையின் மேல் கூரையை துளைத்துக் கொண்டு சென்றன.
விரைந்து வந்த போலீசார் வைரவேல் மற்றும் அவருடன் வந்திருந்த கோபி, ஜீவானந்தம், முருகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications