விருத்தாச்சலத்தில் அட்டகாசம்- பஸ் கண்டக்டரை சரமாரியாக அடித்து உதைத்த பெண் எஸ்.ஐ.
விருத்தாசலம்: காவல் நிலையம் முன் நிறுத்தாத தனியார் பஸ் கண்டக்டரை பெண் எஸ்.ஐ. அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் வனஜா. இவர் கடலூரில் இருந்து விருத்தாசலத்துக்கு தனியார் பஸ்சில் சென்றுள்ளார். பஸ் விருத்தாசலம் வந்த போது, வழியில் உள்ள காவல் நிலையத்தில் நிறுத்துமாறு எஸ்.ஐ. வனஜா கூறியுள்ளார்.
ஆனால் பஸ் காவல் நிலையத்தில் நிற்காமல் அதை தாண்டி அடுத்த ஸ்டாப்பான தாலுகா அலுவலகத்தில் நின்றது. இதனால் ஆவேசமடைந்த எஸ்.ஐ. வனஜா, பயணிகள் முன்னிலையில் கண்டக்டர் பாலமுருகனை அடித்து உதைத்தார். பின்பு கண்டக்டர் பாலமுருகனை (20) காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளார்.
தகவலறிந்த தனியார் பஸ் ஊழியர்கள் கண்டக்டர் பாலமுருகனை விடுவிக்க கோரி விருத்தாசலம் காவல் நிலையம் முன்பு கூடி திடீர் போராட்டம் நடத்தினர். இதனால், பஸ் கண்டக்டர் மற்றும் பஸ் உரிமையாளர்களிடம் இன்ஸ்பெக்டர் சீராளன் பேச்சு வார்த்தை நடத்தனர்.
தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதை அடுத்து, தனியார் பஸ் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications