தனியார் நிறுவனங்கள் வங்கி தொடங்க அனுமதிக்கக்கூடாது: பிரகாஷ் கரத்
டெல்லி: வங்கிகள் தொடங்க தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத் கூறியதாவது:
2008 ம் ஆண்டில் சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் நிதி நெருக்கடியை தொடர்ந்து, வங்கிகள் தொடங்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது என்று மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முடிவு எடுத்து இருக்கிறது. இது நல்ல முடிவு அல்ல.
தனியார் தொழில் நிறுவனங்களை வங்கிகள் தொடங்க அனுமதித்தால் அந்த வங்கிகளில் இருந்து அந்த நிறுவனங்களே அதிக அளவில் கடன் பெற்றுக்கொள்ள முடியும். இதனால் பல நிதி முறைகேடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கடந்த 1969ம் ஆண்டு வங்கிகளை தேசியமயமாக்கும் நடவடிக்கையை இந்திரா காந்தி மேற்கொண்டார். ஆனால் இப்போது, வங்கிகள் தொடங்க பெரிய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது என்று மத்திய அரசு முடிவு செய்து இருப்பது முன்பு இந்திராகாந்தி மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிரானது ஆகும்.
எனவே வங்கிகள் தொடங்க தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடுமையாக எதிர்க்கிறது. இதேபோல் அனைத்து அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
தற்போது பொதுத்துறை வங்கிகள் கிராமப்புறங்களிலும் தங்கள் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறந்து முறையில் செயல்பட்டு வருகின்றன," என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications