எல்லா மக்களும் வாங்கும் வகையில் மருந்துகளின் விலையை குறைக்க வேண்டும்: பிரதீபா பாட்டீல் விருப்பம்
ஹைதராபாத்: எல்லா மக்களும் மருந்துகளை வாங்கும் வகையில், குறைந்த வகையில் மருந்துகளை விற்க வேண்டும் என, குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டேல் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம், ஹைதராபாத்தில் 71வது சர்வதேச மருந்து கூட்டமைப்பு மாநாட்டை பிரதீபா பாட்டீல் துவக்கி வைத்தார். 5 நாட்கள் நடக்க உள்ள இந்த மாநாட்டில், ஆந்திர ஆளுநர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மாநில அமைச்சர்கள், உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் பிரதிபா பாட்டீல் பேசியதாவது, இந்திய மருத்துவத் துறை, உலக அளவில் 3வது இடத்தை பெற்றுள்ளது. இந்த நிலை வருங்காலங்களில் மேலும் அதிகரிக்கும். நாட்டு மக்களின் உடல்நலன், உயிர் பாதுகாப்பு ஆகியவை மருந்துகளில் தான் அடங்கியுள்ளது.
எனவே மருந்து தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். உலகளவில் 50 சதவீத மருந்துகள் தவறான முறையில் எழுதி கொடுக்கப்படுவதும், விற்பனை செய்யப்படுவதும் நடப்பதாக சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த முறையால், அவற்றை உட்கொள்கிறவர்களுக்கு அதிக பின்விளைவுகளை ஏற்படுகின்றன.
இந்திய மருத்துவத் துறை வேகமாக வளர்ந்து வந்தாலும், அதிக மக்கள் கொண்ட நம் நாட்டில் எல்லா மக்களுக்கு மருந்து சரியாக சென்று சேர்வதில்லை. அதற்கு அவற்றின் விலை நிர்ணயமும் ஒரு காரணமாக உள்ளது. எனவே அனைத்து தரப்பு மக்களும் வாங்கும் வகையில், மருந்துகளின் விலைகளை நிர்ணயிக்க நிறுவனங்கள் முன்வர வேண்டும், என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications