ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு செப். 14க்கு ஒத்திவைப்பு

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் ஆஜராகாமல் இருந்து வருகிறார் ஜெயலலிதா. சமீபத்தில் ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என்று சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து தனக்கு விலக்கு அளிக்குமாறு கோரி மனு செய்தார் ஜெயலலிதா. ஆனால் அதை கோர்ட் ஏற்கவில்லை.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தை அவர் அணுகினார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு தர இயலாது என்று கருத்து தெரிவித்தது.
இந்த நிலையில், இன்று பெங்களூர் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா சார்பில் ஆஜரான வக்கீல் கந்தசாமி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான இறுதி உத்தரவு செப்டம்பர் 12ம் தேதி பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த உத்தரவைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். எனவே அதுவரை வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த கோரிக்கைக்கு உதவி சிறப்பு அரசு வக்கீல் சந்தேஷ் செளதா ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இதையடுத்து செப்டம்பர் 14ம் தேதிக்கு வழக்கை நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு கோரி சசிகலா, இளவரசி, சுதாகரன் சார்பில் இன்று புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சசிகலாவின் வக்கீல் இதுகுறித்துக் கூறுகையில், சசிகலாவுக்கு கண்ணில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் நேரில் வர இயலாத இருப்பதாக கூறினார். சுதாகரன் வக்கீல் கூறுகையில், அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார். இளவரசியின் வக்கீல் கூறுகையில், தனது மனுதாரருக்கு சர்க்கரை வியாதி முற்றியுள்ளதாக கூறினார்.
இந்த மனுக்கள் மீதும் செப்டம்பர் 14ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications