வீரபாண்டி ஆறுமுகத்தை வெளியே வரவிட்டு சிறை வாசலில் மீண்டும் கைது செய்த போலீஸ்!

வீரபாண்டி ஆறுமுகம் மீது ஏற்கனவே சேலம் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு வழக்கு, சேலம் 5 ரோடு பிரிமியர் மில் நில அபரிப்பு வழக்கு, சேலம் தாசநாய்க்கன்பட்டி நில அபகரிப்பு வழக்குகள் உள்ளன. இதில் அவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இந் நிலையில் வீரபாண்டி ஆறுமுகம் மீது 4வதாக இன்னொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள கோவை ஜூவல்லரி நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்ததாக இந்த புதிய வழக்கு போடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் இருந்து பிடிவாரண்டு பெறப்பட்டு, சேலம் நீதிமன்றத்தில் தரப்படும். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி அவர் கைது செய்யப்பட்டுள்ளதற்கான உத்தரவை கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் சேலம் போலீசார் தருவார்கள். இதனால் வீரபாண்டி ஆறுமுகம் விடுதலையாக முடியாது என்று முதலில் கூறப்பட்டது.
ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. பழைய வழக்கில் அவர் சிறையிலிருந்து வெளியே வர அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் சிறை வாசலிலேயே வைத்து புதிய வழக்கில் வீரபாண்டியை கைது செய்வதாகக் கூறி சேலம் போலீசார் அழைத்துச் சென்றனர்.
முன்னதாக வீரபாண்டி ஆறுமுகத்தை வரவேற்க பெரும் திரளான தொண்டர்கள் சிறையின் மெயின் வாசலில் காத்திருந்தனர். ஆனால் தொண்டர்களுக்குத் தெரியாமல் 3வது வாசல் வழியாக வீரபாண்டி ஆறுமுகத்தை போலீஸார் அழைத்துச் சென்று விட்டனர்.
கைது செய்யப்பட்ட வீரபாண்டி ஆறுமுகம் சேலம் கொண்டு செல்லப்படுகிறார். அவர் மீண்டும் கைது செய்யப்பட்டது திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications