ஈராக்கில் அடையாள தெரியாத கும்பல் நடத்திய துப்பாக்கி சூடு: 8 ராணுவ வீரர்கள் பலி
பாக்தாத்: ஈராக்கில் அடையாள தெரியாத கும்பல் நடத்திய திடீர் தாக்குதலில், 8 ராணுவ வீரர்கள் பலியாகினர். ஒருவர் காயமடைந்தார்.
ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன், அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்டு, தூக்கு தண்டனை நிறைவேற்றியது. அப்போது முதல், ஈராக்கில் பல தீவிரவாத அமைப்புகளும் ஆங்காங்கே தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல்களை முறியடிக்க ஈராக் தொடர்ந்து போராடி வருகிறது.
ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில் இருந்து ஹடிதா என்ற நகர் வழியாக ஈராக் ராணுவ வீரர்கள் பயணித்து கொண்டிருந்தனர். காலை நேரத்தில் ராணுவ வீரர்கள் சீருடைகளை அணிந்து கொண்டிருந்தபோது, திடீரென அப்பகுதிக்கு ஆயுதமணிந்து வந்த சிலர், ராணுவ வீரர்கள் மீது சராமரியாக சுட்டனர்.
இதில், 1 ராணுவ அதிகாரி உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர். காயமடைந்த ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் நடத்தியவர்களுக்கான தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications