கைதிகளை விடுவிப்பதில் தி.மு.க. காட்டிய பாகுபாட்டை அ.தி.மு.க. செய்ய வேண்டாம்: பழ.நெடுமாறன்
சென்னை: அண்ணா பிறந்தநாளில் சிறைவாசிகளை விடுவிக்கும் போது, தி.மு.க.,வை போல பாகுபாடுகளை பார்த்து விடுவிக்கும் முறையை, அ.தி.மு.க., கடைபிடிக்க வேண்டாம் என பழ.நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அண்ணா பிறந்தநாளான்று நீண்டகாலத் சிறை கைதிகள் பலர் விடுவிக்கப்படுவது வழக்கம். கடந்த தி.மு.க., ஆட்சியில் ஆயுள் தண்டனை கைதிகளான 1450 பேர் விடுவிக்கப்பட்டனர்.
7 முடித்த முஸ்லீம் கைதிகளும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 7 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைவாசம் அனுபவித்தவர்கள் விடுவிக்கப்படவில்லை. ஆனால், லீலாவதி கொலை வழக்கு குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர்.
இது போன்ற தவறு அ.தி.மு.க., ஆட்சியில் நடக்க கூடாது. மதம், இனம், மொழி பாகுபாடுகள் இல்லாமல் சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும். ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளான 3 பேரின் தூக்கு தண்டனையை நிரந்தரமாக ரத்து செய்ய தமிழகம் முழுவதும் கருத்தரங்குகள் நடத்த வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
