ரூ.15 கோடி சொத்து பிரச்சனையில் கட்டப்பஞ்சாயத்து: கேகே நகர் திமுக செயலாளர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ரூ. 15 கோடி மதிப்புள்ள சொத்து பிரச்சனையில் கட்டப்பஞ்சாயத்து செய்த கே.கே. நகர் திமுக செயலாளர் தனசேகரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சென்னை வடபழனி ஆற்காடு ரோட்டில் பரமேஸ்வரி (70) என்பவருக்கு சொந்தமாக வீட்டுடன் இணைந்த வணிக வளாகம் (ரூ.15 கோடி மதிப்புள்ளது) ஒன்று உள்ளது. இந்த வணிக வளாகத்தின் மீது இந்து ஜனோபகாரா சாசுவத நிதி நிறுவனத்திடம் ரூ. 2.5 லட்சம் கடன் வாங்கப்பட்டுள்ளது.

இந்த கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் மேற்படி நிதி நிறுவனம், அந்த வணிக வளாகத்தை ஏலம் விட்டுள்ளது.லலிதா சுகுமாறன் என்பவர் அதை ஏலத்தில் எடுத்து அனந்தலிங்கம் என்பவரிடம் விற்றுள்ளார். இது தொடர்பாக சிவில் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் கே.கே.நகர் பகுதி திமுக செயலாளர் தனசேகரன் தனது அடியாட்களோடு, பரமேஸ்வரியின் எதிர்தரப்பு ஆட்களோடு சேர்ந்துகொண்டு மேற்படி வணிக வளாகத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அதில் ஒரு கடையை சேதப்படுத்தி, பரமேஸ்வரியையும் மிரட்டியுள்ளார். இது தொடர்பாக பரமேஸ்வரி 9.1.2010 அன்று கொடுத்த புகாரின் பேரில் வடபழனி போலீசார் கொலை மிரட்டல் உள்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

முதல் தகவல் அறிக்கையில் தனசேகரனின் பெயரும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டபோது, தனசேகரனின் பெயர் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த மாதம் 3-ம் தேதி அன்று பரமேஸ்வரி கொடுத்த புகாரின், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென்று கூறியிருந்தார்.

தன்னை விசாரிக்காமலேயே தனது வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்துள்ளதாகவும் மனுவில் கூறியிருந்தார். இந்த மனு மீது மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு முருகேசன், கோவிந்தராஜன் ஆகிய இருவர் கடந்த மாதம் 8-ம் தேதி கைது செய்யப்பட்டனர். தனசேகரன் மீதும் மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அவர் அவருடைய வீட்டில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படுவார் என்று அதில் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட தனசேகரனை போலீசார் சைதாப்பேட்டை 17-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு பிரியா வீட்டில் நேற்றிரவு 9. 30 மணிக்கு ஆஜர்படுத்தினர். நீதிபதி தனசேகரனை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார். இதையடுத்து அவரை இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர்.

தனசேகரன் மீது ஜார்ஜ் என்பவர் சொத்து அபகரிப்பு புகார் கொடுத்ததையடுத்து அவர் மீது எம்.ஜி. ஆர். நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தவிர வேறொரு வழக்கில் தனசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இடைக்கால முன்ஜாமீன் பெற்றுள்ளார்.

முன்ஜாமீன் கேட்டு தனசேகரன் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,

கேயஸ் மெர்க்கண்டைல் டிரேடிங் நிறுவனத்தைச் சேர்ந்த சசிரேகா மற்றும் அவரது கணவர் கல்கி மீது கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசில் பாலதண்டாயுதம் என்பவர் நிதிநிறுவன மோசடி புகார் கொடுத்தார்.

ரூ. 21 லட்சம் மோசடி செய்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. அந்த வழக்கில் கைதான சசிரேகா மற்றும் சுதர்சன் ஆகியோர் கொடுத்த வாக்குமூலத்தில் எனது பெயரை கூறியதாகச் சொல்லி, வழக்கில் எனது பெயரை சேர்த்துவிட்டனர். ஆனால் சசிரேகா மற்றும் எனக்குமிடையே பணம் மற்றும் சொத்துப் பரிமாற்றம் மட்டும் நடந்தது. ஆனால் எந்த மோசடியிலும் நான் ஈடுபடவில்லை. என் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, எனக்கு இந்த வழக்கில் முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என்று அதில் அவர் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கே.பி.கே.வாசுகி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர் வரும் 9-ம் தேதி போலீசார் இந்த மோசடி வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அதுவரை தனசேகரனுக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+