வாக்களிக்கவோ, கேள்வி கேட்கவோ லஞ்சம் கேட்கும் எம்.பிக்களை தூக்கில் போடுங்கள்- அன்னா ஹஸாரே
ராலேகான் சித்தி (மகாராஷ்டிரா): நாடாளுமன்றத்தில் தீர்மானங்கள், நம்பிக்கை வாக்கெடுப்புகள் போன்றவற்றின் மீது வாக்களிக்கவோ அல்லது மக்கள் பிரச்சினை தொடர்பாக கேள்வி கேட்கவோ லஞ்சம் கேட்கும் எம்.பிக்களையும், எம்.எல்.ஏக்களையும் தூக்கில் போட வேண்டும் என்று சமூக சேவகர் அன்னா ஹஸாரே ஆவேசமாக கூறியுள்ளார்.
எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் நேற்று அமர்சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் அன்னா ஹஸாரே இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் நடந்த கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹஸாரே அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சட்டசபையிலும், நாடாளுமன்றத்திலும் கேள்வி கேட்கவும் வாக்களிக்கவும் லஞ்சம் பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை இப்படிப்பட்டவர்களைத் தூக்கிலிட வேண்டும்.
ஊழலுக்கு எதிரான வலுவான சட்டத்தைக் கொண்டுவந்தால், இவர்களைப் போன்றவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்க முடியும்.
எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய அரசு நேர்மையாக விசாரணை நடத்தினால், நமது அரசியல் அமைப்பில் உள்ள ஓட்டைகள் தெரியவரும் என்றார் ஹஸாரே.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications