களியக்காவிளை,ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய காங். எம்.எல்.ஏ.: டிரைவர்கள் ஸ்டிரைக்
களியக்காவிளை: கேரள மாநிலம், பாறாசாலை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜார்ஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து 108 ஆம்புலன்ஸ் டிரைவர் நவுசாத் என்பவரை தாக்கியுள்ளனர்.
களியக்காவிளையை அடுத்துள்ள பாறாசாலை மருத்துவமனையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் வேனில் டிரைவராக பணிபுரிபவர் நவுசாத் மற்றும் டெக்னீஷியன் ரசீத். இவர்கள் 2 பேரும் வழக்கம் போல் பணியில் இருந்தனர்.
அப்போது நெடுவலம் விளையைச் சேர்ந்த வாசவன் என்பவர் விபத்தில் சிக்கிவிட்டதாகக் கூறி அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதை கேட்ட நவுசாத் ஆம்புலன்ஸ் வேன் பழுதாகி உள்ளது என்றும், வேறு ஆம்புலன்சை அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த வாசவனின் உறவினர்கள் நேராக மருத்துவமனைக்கு சென்று அங்கு நவுசாத், ரசீத் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அந்த நேரத்தில் பாறாசாலை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜார்ஜ் மற்றும் 10 பேர் அங்கு வந்தனர். அவர்கள் நவுசாத்துடன் தகராறு செய்து ஆம்புலன்சுக்கு உடனே ஏற்பாடு செய்யுமாறு கூறினர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது நவுசாத்தையும், டெக்னீஷியன் ரசீத்தையும் எம்.எல்.ஏ. ஜார்ஜ் மற்றும் அவருடன் வந்தவர்கள் இரும்புக் கம்பிகளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நவுசாத் மற்றும் ரசீத் ஆகியோரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த தகவல் திருவனந்தபுரத்தில் உள்ள அனைத்து 108 அரசு ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும், டெக்னீஷியன்களுக்கும் தெரிய வந்தது. உடனே அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். மேலும் எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் பாதிக்கப்படாத வகையில் தனியார் ஆம்புலன்ஸ் வண்டிகளுக்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications