சட்டசபைக்குப் போகும்போது காதுல பஞ்சைத்தான் வச்சுக்கணும்-கருணாநிதி சலிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையிலே பேசினால் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஏனென்றால் கழக தலைவர்கள் எல்லாம் வெளியே இருக்ககிறார்கள். அவர்கள் உள்ளே வரவில்லை, உள்ளே வரவிட மாட்டோம், வந்தால் இந்த கதைகளை ஏற்றுக் கொள்ள அவர்களுடைய காதுகள் தயாராக இல்லை. காதிலே பஞ்சை வைத்துக் கொண்டுதான் அவர்கள் சட்டசபைக்கு வரவேண்டிய சூழ்நிலை இருக்கிறது என்றார் திமுக தலைவர் கருணாநிதி.

சென்னை அறிவாலயத்தில் நடந்த திமுக இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசினார் கருணாநிதி. அவரது பேச்சு:

கழகத்திற்கு இப்போது வந்துள்ள சோதனை பற்றி இங்கு குறிப்பிடப்பட்டது. நமக்கென்ன சோதனை வந்து விடப்போகிறது, நெருக்கடிக் காலக் கொடுமைகளை விடவா வந்து விடப்போகிறது? நெருக்கடி நிலைக்கு காரணமான இந்தியாவின் தலைசிறந்த தலைவியாக விளங்கிய இந்திராகாந்தியே தி.மு.கழகத்தை வீழ்த்த முடியவில்லை. அவர்களே சென்னை கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் நடைபெற்ற காரியங்களுக்காக நான் வருந்துகிறேன் என்று வருத்தம் தெரிவிக்கின்ற நிலைமைக்கு திராவிட மக்கள், தமிழ் மக்கள் தி.மு. கழகத்தை அன்றைக்கு தாங்கிப் பிடித்தார்கள் என்பதை வரலாறு உணரும். அந்த வரலாறு மீண்டும் திரும்புவதறகு இன்றைக்கு இருக்கின்ற ஆட்சியாளர்கள் வழி வகுப்பார்களேயானால் அதற்காக முன்கூட்டியே நன்றி கூறுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஜனநாயகம் இன்றைக்கு தமிழக சட்டமன்றத்தில் தேடப்பட வேண்டிய ஒரு பொருளாக ஆகிவிட்டிருக்கின்றது. அதனால்தான் நம்முடைய கழக நண்பர்கள் சட்டமன்றத்திற்கு சென்று நேற்றைக்கு கூட சபாநாயகர் திருக்குறளை படித்து முடித்தவுடன் வெளியேறி விட்டார்கள். வெளியேறியவர்களை நிருபர்கள் என்ன திருக்குறள் படித்து முடித்தவுடன் வெளியேறி விட்டீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு இவர்கள், நல்ல சொற்களை கேட்டு முடித்து விட்டோம். தீய சொற்களை கேட்க நாங்கள் தயாராக இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள். திருக்குறள் ஒன்றை தவிர காதால் கேட்கக் கூடிய எந்தவொரு சொல்லும் தமிழக சட்டமன்றத்தில் ஒலிக்கவில்லை என்பதற்கு இதைவிட வேறு சான்றினை சொல்ல நான் விரும்பவில்லை.

தி.மு.கழகத்தை பொறுத்தவரையில் நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்த போது எந்த அளவிற்கு கண்ணியமாக, நாகரீகமாக, எதிர்க்கட்சிகளை மதிக்கின்ற வகையில் நடந்து கொண்டோம் என்பதையும், இன்றைக்கு இருக்கின்ற ஆட்சியாளர்கள் எந்த வகையில் நடந்து கொள்கிறார்கள் என்பதையும் தயவுசெய்து எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஒருவர் பேசியிருக்கிறார்- இவருக்குத்தான கதை சொல்லத் தெரியும் என்று மண்வெட்டி கதை சொல்லியிருக்கிறார். ஒரு விவசாயி கடவுளைப் பார்த்து கேட்டாராம், நான் விவசாயம் செய்ய வேண்டும், கடவுளே எனக்கு ஏதாவது உதவி செய் என்று கேட்டாராம். விவசாயம் செய்ய வேண்டு மென்றால் கடவுள் என்ன செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருந்தால் அதை ரத்து செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு கடவுள் இந்தா ஒரு மண்வெட்டியை வைத்துக் கொள் என்று ஒரு இரும்பு மண்வெட்டியை கொடுத்தாராம்.

விவசாயி அந்த மண்வெட்டியை வாங்கி வெட்டினாராம். மண்ணை வெட்டினால் தான் மண்வெட்டி. தமிழ் தெரிந்தவர்களுக்கு இதெல்லாம் தெரியும். இரும்பு வெட்டியால் வெட்டியவுடன் இரும்பாகவே வந்ததாம். உடனே அவன் மகிழ்ச்சி அடைந்து கடவுளிடம் எனக்கு வேறொரு மண்வெட்டி கொடு என்று கேட்டானாம். உடனே கடவுள் வெள்ளி மண்வெட்டி கொடுத்தாராம். அதை வாங்கி விவசாயி வெட்டினானாம்.

நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எங்கேயாவது வெள்ளியால் மண்வெட்டி செய்து மண்ணை வெட்டுகின்ற மடையன் இருப்பானா? வெள்ளியால் மண் வெட்டி கிடைத்தால் வெள்ளியைத்தான் வெட்டுவன். இவன் வெள்ளி மண்வெட்டியால் மண்ணை வெட்டினானாம். அது வெள்ளியாக கொடுத்ததாம்.

மீண்டும் கடவுளிடம் அவன் பேராசைப்பட்டு கேட்டதால் தங்க மண்வெட்டி கொடுத்தாராம். இவன் தங்க மண்வெட்டியை வைத்துக் கொண்டு, தங்கம் கிடைக்குமென்று தோண்டிக் கொண்டே போய் தரைக்குள்ளேயே மூழ்கி விட்டானாம. அது யாராம்? அது தி.மு.கழக மாம். தி.மு.க. தங்க மண்வெட்டியாக ஆக்கப்பட்டு, குழி தோண்டி, அந்த குழிக்குள் விழுந்து புதைந்து போனதாக கதை சொல்ல வந்தவர், கதையைச் சொல்லி முடித்திருக்கிறார்.

சட்டசபையிலே பேசினால் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஏனென்றால் கழக தலைவர்கள் எல்லாம் வெளியே இருக்ககிறார்கள். அவர்கள் உள்ளே வரவில்லை, உள்ளே வரவிட மாட்டோம், வந்தால் இந்த கதைகளை ஏற்றுக் கொள்ள அவர்களுடைய காதுகள் தயாராக இல்லை. காதிலே பஞ்சை வைத்துக் கொண்டுதான் அவர்கள் சட்டசபைக்கு வரவேண்டிய சூழ்நிலை இருக்கிறது என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+