மாற்றுத் திறனாளி வாலிபர் தீக்குளித்து சாவு-போலீஸ் தொல்லை காரணம்?
சென்னை: சென்னையில் மாற்றுத் திறனாளி வாலிபர் ஒருவர் தீக்குளித்து இறநதார். அவர் குடும்ப பிரச்சனை காரணமாகத் தான் இவ்வாறு செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சென்னை, தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் குட்டி. அவருக்கு சந்துரு, சூர்யா என்ற மகன்கள் உள்ளனர். இதில் மாற்றுத் திறனாளியான சந்துரு ஆட்டோ ஓட்டி வந்தார். சூர்யா அப்பகுதி ரவுடியாக சுற்றித் திரிந்ததால் பல வழக்குகளில் சிக்கி சிறையில் உள்ளார்.
இந்நிலையில் போலீசார் சந்துருவை அடிக்கடி அழைத்து விசாரித்தனர். நேற்று சந்துருவை தேடிப் போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர். இதனால் சந்துருவின் தாய் போலீசாரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த சந்துரு இதை கண்டு மனமுடைந்தார்.
போலீசார் முன்னிலையில் வீட்டுக்குள் சென்ற சந்துரு மண்ணெண்ணெய் உடன் வெளியே வந்தார். பின் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயமடைந்த சந்துரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசாரின் தொந்தரவு தாங்க முடியாமல் தான் சந்துரு தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். ஆனால் குடும்ப பிரச்சனையால் தான் சந்துரு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications