அமெரிக்க பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் உள்ளது! - ஒபாமா

அமெரிக்க வேலையில்லாத் திண்டாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், 447 பில்லியன் டாலர் வேலைத் திட்டத்தை அறிவித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒபாமா பேசினார்.
தனது உரையில், "பெரும் கடன்சுமையிலிருந்து அமெரிக்கா மீண்டுள்ளது. ஆனாலும் நமது நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியினை சந்தித்து வருவதை மறைக்க விரும்பவில்லை.
வேலையில்லா திண்டாட்டத்தால் பல லட்சம் பேர் பக்கத்து நாடுகளுக்கு செல்கின்றனர். தற்போது இவற்றைப் போக்குவது அவசியமாக உள்ளது.
அதற்காகவே 447 பில்லியன் டாலர் புதிய வேலைவாய்ப்பு சட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளேன். இதன் மூலம் கட்டுமானத்துறை, கல்வித்துறை உள்ளிட்டவைகளில் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் ஒபாமா கூறினார்.
மேலும் சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி அவர்கள் புதிய வேலைவாய்ப்பினை உருவாக்கலாம்," என்றார்.
இந்த மசோதாவை ஏக மனதாக நிறைவேற்ற குடியரசுக் கட்சியினர் ஆதரவளிக்க வேண்டும் என்றும் ஒபாமா கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications