For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலீசாரைக் கண்டித்து இந்து முன்னணியினர் போராட்டம்

Google Oneindia Tamil News

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே விநாயகர் சிலையை போலீசாரே எடுத்துச் சென்று கரைத்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவி்த்து இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் கிராமத்தில் பொது மக்கள் சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டது. கடந்த 5 நாட்களுக்கு பிறகு விநாயகர் சிலையைக் கரைக்க பொது மக்கள் மற்றும் இந்து முன்னணியினர் எடுத்து சென்றனர்.

அப்போது குறிப்பிட்ட வழியாக ஊர்வலம் செல்லக் கூடாது என்று கூறி போலீசார் தடுத்தனர். இதனால் விழா குழுவினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, விநாயகர் சிலையை போலீசாரே எடுத்துச் சென்று கரைத்துவிட்டனர்.

போலீசாரின் இந்த செயலுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவி்த்தனர். மேலும் 100க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளை அடைத்து கண்டனத்தை தெரிவித்தனர்.

English summary
Hindu munnani protested against the police in Krishnagiri district for not allowing Vinayahar procession. Nearly 100 shops owners closed there shops and joined with the protest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X