திருப்பூர் அருகே கார்-அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி
தாராபுரம்: திருப்பூர் அருகே காரும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
திருப்பூர் மங்கலம் ரோட்டில் உள்ள குமரன் கல்லூரி அருகே உள்ள எஸ்.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகரசுதன் (33). பஞ்சு வியாபாரி. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கூவக்காபட்டியில் உள்ள அக்கினி அம்மன் கோவில் தான் அவருடைய குல தெய்வ கோவில்.
இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காக ஹரிகரசுதன் தனது மனைவி சுதா (25), மகன் பிரணவ் கண்ணா (4), 4 மாத பெண் குழந்தை, தம்பி பாலச்சந்திரன் (30), தாயார் கலாவதி (55) ஆகியோருடன் கூவக்காபட்டிக்கு சென்றார்.
அங்கு கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சாமி கும்பிட்டுவிட்டு அனைவரும் நேற்று மதியம் காரில் திருப்பூருக்கு கிளம்பினார்கள். காரை ஹரிகரசுதன் ஓட்டினார். அவர்கள் கார் நேற்று மாலை 4. 45 மணிக்கு திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே உள்ள நால் ரோட்டில் இருக்கும் தனியார் மில் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது திருப்பூரில் இருந்து தேனி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதின. இந்த பயங்கர விபத்தில் கார் அப்பளம் போன்று நொறுங்கியது. இதையடுத்து பேருந்து ஓட்டுனர் தப்பியோடிவிட்டார். இந்த கோர விபத்தில் ஹரிகரசுதன், கலாவதி, சுதா ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். பாலசந்திரன், பிரணவ் கண்ணா மற்றும் 4 மாத பெண் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.
அவர்கள் 3 பேரும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தனர். இந்த விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பித்து ஓடிய பேருந்து ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
இந்த விபத்தில் பலியான பாலச்சந்திரனுக்கும், கோவையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று தான் நிச்சயதார்த்தம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications