மருத்துவமனையில் அமர், இன்று ஜாமீன் மனு விசாரணை
டெல்லி: ராஜ்யசபா உறுப்பினர் அமர் சிங் டெல்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடக்கவிருக்கிறது.
கடந்த 2008-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க எம்.பி.களுக்கு பணம் கொடுத்த வழக்கில் எம்.பி.யும், சமாஜ்வாடி கட்சி முன்னாள் உறுப்பினருமான அமர் சிங் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சங்கீதா ஜாமீன் கொடுப்பது பற்றி இன்று(13-ம் தேதி) தீர்ப்பளிக்கப்படும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
இந்நிலையில் அமர் சிங்கிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் நேற்றிரவு 8 மணி அளவில் அவரை டெல்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் சேர்த்ததாக திஹார் சிறையின் செய்தித் தொடர்பாளர் சுனில் குப்தா தெரிவித்தார்.
முதலில் சிறையில் உள்ள மருத்துவர்கள் அமர் சிங்கை பரிசோதித்துவிட்டு அவரை உடனடியாக அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் சேர்க்குமாறு பரிந்துரைத்தனர். அதன்படி தான் அவர் மருத்துவமனையில் உள்ளார். அங்கு நெப்ராலஜி துறை தலைவர் டாக்டர் குப்தா அமர் சிங்கிற்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
அமர் சிங்கின் உடல்நலக்குறைவை காரணம் காட்டி தான் அவருக்கு ஜாமீன் கோரப்பட்டுள்ளது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அவர் திஹார் சிறையில் மற்ற கைதிகள் பயன்படுத்தும் பொதுக் கழிவறையை பயன்படுத்துவதால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஆனால் அமர் சிங்கை தனி அறையில் சுகாதாரமான சூழ்நிலையில் தான் வைத்துள்ளதாக திஹார் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமர் சிங்கிற்கு எடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவி்ல்லை. முதலில் பரிசோதனைக்கு ரத்தம் கொடுக்க மறுத்த அமர் இன்று காலை தான் ரத்தம் கொடுக்க சம்மதித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications