வீரபாண்டி ஆறுமுகம், ரங்கநாதன் சிறை மாற்றம்: எழுத்துப்பூர்வ விளக்கம் கேட்டு அரசுக்கு உயர் நீதிமன்றம்
சென்னை: முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், முன்னாள் எம்.எ.ல்.ஏ. ரங்கநாதன் ஆகியோரை வேறு சிறைகளுக்கு மாற்றியதற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நில அபகரிப்பு வழக்கில் கைதான முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் திருச்சி சிறையிலும், முன்னாள் எம்.எ.ல்.ஏ. ரங்கநாதன் வேலூர் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களை சேலம் மற்றும் புழல் சிறைக்கு மாற்ற மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து வீரபாண்டி ஆறுமுகம் மகன் ராஜா, ரங்கநாதனின் மனைவி நளினி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்கள் நீதிபதிகள் நாகப்பன், சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் மகாராஜன் ஆஜரானார். அவர் வாதாடுகையில் பாதுகாப்பு காரணங்களுக்காகத் தான் இருவரையும் வேறு சிறைகளுக்கு மாற்றியதாகத் தெரிவித்தார்.
அதற்கு அரசு தரப்பு விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து இந்த வழக்கு வரும் 15-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்று தலைமை குற்றவியல் அரசு வழக்கறிஞரை ஆஜராகுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன்
திமுக நிர்வகாகியை கொலை செய்யத் தூண்டியது உள்பட 3 வழக்குகளில் கைது செய்யப்பட்ட திருச்செந்தூர் திமுக எம்.ல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
ஆறுமுகநேரி நகர திமுக செயலாளர் சுரேஷை கொலை செய்யத் தூண்டியது, இங்குள்ள நகர திமுக அலுவலகத்திற்கு தீ வைக்கத் தூண்டியது, டாஸ்மாக் பார் மீது குண்டுவீசத் தூண்டியது ஆகிய 3 வழக்குகளில் திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில அடைக்கப்பட்டார்.
இந்த 3 வழக்குகளிலும் ஜாமீன் கோரி தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு 7 முறை தள்ளிவைக்கப்பட்டு இன்று இறுதியாக நீதிபதி பிரபுதாஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications