உள்ளாட்சித் தேர்தலில் பணத்தின் அடிப்படையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை: கலெக்டர் சகாயம்
மதுரை: உள்ளாட்சித் தேர்தலில் சாதி, மதம் மற்றும் பணத்தின் அடிப்படையில் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையில் சட்டம், ஒழுங்கை பாதுகாப்பது குறித்த ஆய்வு கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் தலைமையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு கலெக்டர் சகாயம் பேசியதாவது, மதுரை மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செயல்பட்டு வருகிறது.
பிரச்சினைகள் ஏற்படும் முன், அசம்பாவிதங்களை தடுக்க காவல் துறையும், வருவாய்த் துறையும் இணைந்து செயல்பட வேண்டும். உத்தப்புரம், வில்லூர் ஆகிய கிராமங்களில் ஏற்பட்டுள்ள சாதி பிரச்சினையால் பலமுறை அமைதி குழுக்கள் அமைக்கப்பட்டும், இதுவரை முடிவு காண முடியவில்லை.
எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண 2 சமுதாய இளைஞர்களை அழைத்து பேசி தீர்வு காண காவல்துறை மற்றும் வருவாய்த் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் தாங்கள் பணியாற்றும் கிராமங்களிலேயே தங்கியிருந்து பணியாற்ற வேண்டும்.
அவ்வாறு செயல்படாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சாதி, மதம், பணத்தின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலில் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனிவரும் காலங்களில் ஊராட்சி தலைவர் பதவியை ஏலம் போடும் முறை இருக்க கூடாது. இதை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications