ரயில் விபத்தில் சிக்கி காயமடைந்த 83 பேருக்கு தீவிர சிகிச்சை-10 பேர் கவலைக்கிடம்
Subscribe to Oneindia Tamil

அரக்கோணம் அருகே சித்தேரி ரயில் நிலையம் அருகே நடந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 83 பேர் காயமடைந்தனர். இவர்களில் 36 பேர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் அரக்கோணத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குக் காரணமான மேல்மருவத்தூர்-வேலூர் ரயிலின் டிரைவர் ராஜ்குமாரும் சென்னையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications