டி.டி.எச். சேவை, ஐ.பி.எல்.-க்கு கேளிக்கை வரி: சட்டசபையில் மசோதா தாக்கல்
சென்னை: டி.டி.எச். மற்றும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கும் கேளிக்கை வரி விதிக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான மசோதாவை இன்று சட்டசபையில் தாக்கல் செய்தது.
இது குறித்து வணிகவரித்துறை அமைச்சர் அக்ரிகிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த சட்ட மசோதா:
தமிழ்நாடு கேளிக்கை வரி சட்டத்தின்படி வீடுகளுக்கு நேரடி சேவையாக வழங்கப்படும் (டி.டி.எச்.) கேளிக்கைகளையும் இந்திய பிரதான கழகத்தால் (ஐ.பி.எல்.) நடத்தி வரும் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளுக்கு இதுவரை வரி எதுவும் இல்லை. சில மாநிலங்களில் இதற்கு கேளிக்கை வரி விதிக்கப்பட்டு வருகிறது. எனவே, தமிழக அரசும் டி.டி.எச். சேவைக்கும், ஐ.பி.எல். கிரிக்கெட் விளையாட்டு போட்டிக்கும் கேளிக்கை வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இதன்படி டி.டி.எச். நிறுவனங்களுக்கு 30 சதவீதமும், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு 25 சதவீதமும் வரி விதிக்கப்படும்.
திரையரங்குகளில் திரைப்பட காட்சியை ஒளிபரப்ப அனுமதிப்பதற்கான வரியையும் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. வணிகர்களிடம் இருந்து விற்பனை வரி நிலுவை தொகையை வசூலிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. நிலுவைகளை வசூலிக்க மீண்டும் சமாதான திட்டத்தை அறிமுகம் செய்ய சட்டசபையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டம் அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை நடைமுறையில் இருக்கும் என்றும் கூறப்பட்டு இருந்தது. அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் சட்டம் இயற்றப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தில் விற்பதற்கான பெட்ரோலிய பொருட்கள் இங்கு விற்கப்படுகிறது. இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.
இந்த வரி ஏய்ப்பை தடுக்க சட்டதிருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்தின்படி 6-வது இணைப்பு பட்டியலில் குறிப்பிட்டுள்ள மாநிலங்களுக்கு இடையே விற்பனை செய்யப்படும் எந்த சரக்குகளுக்கும் கடவு சீட்டு அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் திருத்தம் செய்யப்படுகிறது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications