மோடிக்கு போட்டியாக காங்கிரஸ் 'ஏட்டா போட்டி' உண்ணாவிரதம்!
அகமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு போட்டியாக தானும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அந்த மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான சங்கர் சிங் வகேலா அறிவித்துள்ளார்.
மோடியின் உண்ணாவிரதம் தொடங்கும் செப்டம்பர் 17ம் தேதியன்றே வகேலாவும் காங்கிரசாரும் உண்ணாவிரதம் இருக்க உள்ளனர்.
வகேலாவுடன் தேசிய அளவிலான சில காங்கிரஸ் தலைவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவர் என்று தெரிகிறது.
மோடியைவிடக் கூடுதலாக இரண்டு மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் வகேலா அறிவித்துள்ளார்.
முன்னதாக அமைதி, மத நல்லிணக்கத்திற்காக 3 நாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நரேந்திர மோடி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
குஜராத் மதக் கலவர வழக்கில் நரேந்திர மோடியை விசாரிப்பது குறித்து கீழ் நீதிமன்றம்தான் முடிவு செய்ய முடியும். இதில் நாங்கள் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட அடுத்த நாளே இந்தப் போராட்டத்தை மோடி அறிவித்தார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அத்வானி, அருண் ஜேட்லி ஆகிய மூத்த தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications