டென்மார்க்கின் முதல் பெண் பிரதமராக ஷ்மிட் தேர்வு
கோபென்ஹேகன்: ஹெல்லி தார்னிங் ஷ்மிட் டென்மார்க்கின் முதல் பெண் பிரதமராக பதவியேற்கவிருக்கிறார். அவரின் இடதுசாரி கூட்டணி தற்போதைய பிரதமர் லார்ஸ் ரோக்கே ராஸ்முசனின் கூட்டணியைத் தோற்கடித்துள்ளது.
டென்மார்க்கில் நேற்று தேர்தல் நடந்தது. இதில் ஹெல்லி தார்னிங் ஷ்மிட்டின்(46) டென்மார்க் சமூக ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றது. 4 கட்சிகள் கொண்ட இந்த இடதுசாரி கூட்டணி டென்மார்க் நாடாளுமன்றத்தில் உள்ள 179 இடங்களில் 89 இடங்களை கைப்பற்றியது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு இடதுசாரிகள் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாங்கள் தவறு செய்யமாட்டோம். இன்று புதிய சரித்திரத்தை எழுதியுள்ளோம் என்று ஷ்மிட் தெரிவித்தார்.
திருமதி. ஷ்மிட் கடந்த 1966-ம் ஆண்டு பிறந்தார். கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பயின்றார். பின்னர் புரூகஸில் உள்ள யூரோப்பியன் கல்லூரி்யில் படித்தார். டானிஷ் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் ஆலோசகராக பணி புரிந்துள்ளார்.
கடந்த 2005-ம் ஆண்டு சமூக ஜனநாயகக் கட்சி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2007-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஷ்மிட் கட்சி படுதோல்வி அடைந்தது.
தினசரி வேலைநேரத்தில் 12 நிமிடங்கள் அதிகரிக்க அவர் முடிவு செய்துள்ளார். இதனால் உற்பத்தி பெருகும் என்றும், அது நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இதை தற்போதைய பிரதமர் ராஸ்முசன் உள்ளிட்ட அரசியல் விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications