பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க மீண்டும் சதி!
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே தண்டவாளத்தில் பாறங்கல்லை வைத்து பொதிகை எக்ஸ்பிரசை கவிழ்க்க மீண்டும் சதி நடந்தது. அதி்ர்ஷ்டவசமாக போலீசார் முன் கூட்டியே கண்டுபிடித்து அகற்றியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சென்னையில் இருந்து கடந்த 13ம் தேதி செங்கோட்டை வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை சங்கரன்கோவில் அருகே தண்டவாளத்தில் கான்கீரிட் சிலிப்பர்களை வைத்து கவிழ்க்க சதி நடந்தது. லோகை பைலட்டின் சாமர்த்தியத்தால் அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்தில் இருந்து தப்பியது.
தமிழக ரயில்வே ஐஜி சுனில்குமார் நேற்று மாலை சங்கரன்கோவில் வ்ந்து ரயிலை கவிழ்க்க சதி நடந்த இடத்தை பார்வையிட்டார். அவருடன் விருதுநகர் மாவட்ட எஸ்பி நஜ்முல் ஹோடா, ரயில்வே எஸ்பி தமிழ்சந்திரன், மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர். பின்னர் கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு ஐஜி சுனில்குமார் சென்று நாசவேலையில் ஈடுபட்ட மர்ம கும்பலை கைது செய்வதற்கான வியூகம் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நெல்லை புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை நேற்று மீண்டும் கவிழ்க்க சதி நடந்தது. செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு பொதிகை ரயில் நேற்று இரவு 7 மணிக்கு புறப்பட்டது. 8 மணிக்கு சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
இலவன்குளம்-மனலூர் இடையே சென்றபோது தண்டவாளத்தில் பாறங்கல் வைத்திருந்ததை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கண்டுபிடித்தனர். இதனால் நடுக்காட்டில் திடீரென ரயில் நிறுத்தப்பட்டது. ரயிலா நின்றதற்கான காரணம் தெரியாமல் பயணிகள் பீதி அடைந்தனர். போலீஸ் அதிகாரிகள் பாறங்கல்லை அப்புறப்படுத்தினர். மேலும் தண்டவாளத்தில் வேறு இடங்களில் நாசவேலை நடந்துள்ளதா என தீவிரமாக சோதனையிடப்பட்டது. தொடர்ந்து மீண்டும் ரயில் செல்ல அனுமதிக்கப்பட்டது. சுமார் 10 நிமிடம் தாமதத்திற்கு பிறகு பொதிகை எக்ஸ்பிரஸ் ராஜபாளையத்திற்கு புறப்பட்டு சென்றது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications