சப் இன்ஸ்பெக்டரை அடித்ததாக 16 வயது சிறுவன் மீது வழக்கு!

இந்த வழக்கு பொய்யானது என்று கூறி சிறுவனின் குடும்பத்தினர் சென்னை கமினரிடம் புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
11ம் வகுப்பு படிக்கும் கண்ணன் (பெயர் மாறியுள்ளது) என்ற 16 வலயது சிறுவனும், அவன் நண்பர் பங்கஜ் குமாரும் காரில் சென்று கொண்டிருந்தனர். பங்கஜ்குமாரின் டிரைவர் ரபிக் அல் அஸ்லம் காரை ஓட்டி வந்தார்.
அதிவேகமாக ஓட்டியதற்காக துரைப்பாக்கம் சிக்னல் அருகே அந்தக் காரை நிறுத்தினார் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன். நிற்பது போல மெதுவாக வந்த கார், திடீரென்று வேகமெடுத்தது. இதனால் காரை நெருங்கிய சப் இன்ஸ்பெக்டர் ரமே் கண்ணன் கீழே விழுந்தார்.
பின்னர் அந்த காரை விரட்டிப்பிடித்து நிறுத்தினார் கான்ஸ்டபிள் முருகேசன். பின்னர் நிறுத்தாமல் போனதற்காக ரூ 50ம், வேகமாக ஓட்டியதற்காக ரூ 1000-மும் அபராதம் விதித்தார் சப் இன்ஸ்பெக்டர்.
இதற்கிடையே, சிறுவன் கண்ணன், அவனுக்குத் தெரிந்த பல முக்கிய நபர்களுக்கு போன் செய்து போலீஸ் அதிகாரியிடம் பேச வைக்க முயன்றதாகவும், ஆனால் அதற்கெல்லாம் அசையாததால், வேறு வழியின்றி சிறுவனின் சகோரதரன் வந்து பணத்தை போலீஸ் அதிகாரியின் முகத்தில் விட்டெறிந்ததோடு, நால்வரும் சோர்ந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து எஸ்ஐ ரமேஷ் கண்ணன் அளித்த புகாரின் பேரில் சிறுவன் கண்ணன் மற்றும் அவனுடன் வந்த நால்வர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர் துரைப்பாக்கம் போலீசார்.
சிறுவனின் தாயார் மறுப்பு
இந்த புகாரை மறுத்துள்ளார் கண்ணனுடன் சென்ற பங்கஜ் குமாரின் தாயார் அனுபமா ஜெயின். கண்ணனின் தாயார் இவர் வீட்டில்தான் வேலை செய்கிறாராம்.
இதுகுறித்து அனுபமா ஜெயின் கூறுகையில், "கண்ணனும் என் மகன் பங்கஜும் காரை நிறுத்தியம், வண்டியின் ஆவணங்களைக் கேட்டுள்ளார் ரமேஷ் கண்ணன். அவை சரியாக இருந்தும், நம்பர் பிளேட் சரியில்லை என்று கூறி ரூ 250 லஞ்சம் கேட்டுள்ளார். இதைக் கொடுக்காததால் வாக்குவாதம் முற்றியுள்ளது. அதனை மொபைலில் படம் பிடிக்க முயன்றபோது, கண்ணனையும் பங்கஜையும் தாக்கியுள்ளைார் சப் இன்ஸ்பெக்டர்," என்றார்.
இதனை அவர் போலீஸ் கமிஷனர் திரிபாதியிடமும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இணை கமிஷனர் சஞ்சய் அரோராவிடம் புகார் தெரிவிக்குமாறு கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து சஞ்சய் அரோராவிடம் சப் இன்ஸ்பெக்டர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மனித உரிமை ஆணையத்தை அணுகப் போவதாக சிறுவனின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications