ரயில் கட்டணம் உயராது! - மத்திய அமைச்சர் உறுதி
Subscribe to Oneindia Tamil

ரயில்வே தொழிற்சங்கங்கள் பயணிகளுக்கான ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இதுகுறித்து அமைச்சர் தினேஷ் திரிவேதியிடம் கேட்டபோது, "ரயில் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமோ, திட்டமோ இல்லை. சாமானிய மக்களுக்கு மேலும் சுமையை ஏற்றும் எந்த செயலையும் செய்ய மாட்டோ
ரயில்வே துறைக்கு நிதியை அதிகரிக்க என்ன செய்யலாம் என்பது குறித்து பிரதமர் மன்மோகன்சிங், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருடன் ஆலோசனை நடத்துவேன். திட்டக்குழுவையும் அணுகுவேன். ரயில்வேக்கு நிதியை அதிகரிக்க, புதிய வழிவகைகள், புதிய திட்டங்கள் கண்டு புத்துயிர் ஊட்ட வழிவகை காண்போம்," என்றார்.
ஆனால் சில தினங்களுக்கு முன் ரயில் கட்டணங்களை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தினேஷ் த்ரிவேதி அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications