திருச்சி மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளர் ஜெயாவை எதிர்த்து மகளிர் அணி நிர்வாகி விலகல்
திருச்சி: அதிமுக சார்பில், திருச்சி மாநகராட்சி மேயர் வேட்பாளராக எம்.எஸ்.ஜெயா அறிவிக்கப்பட்டதை கண்டித்து, மகளிர் அணி நிர்வாகி ஒருவர் ராஜினாமா செய்துள்ளார்.
திருச்சி மாநகர மேயர் பதவிக்கு அதிமுக வேட்பாளராக எம். எஸ். ஜெயா -வை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.
கட்சியில் எந்த பொறுப்பும் வகிக்காத இவருக்கு அதிமுக தலைமை சீட் வழங்கியுள்ளது திருச்சி பகுதி அதிமுக நிர்வாகிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கட்சியின் மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் உமா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அதிமுகவில் இரவு பகல் பாராது, குடும்பத்தைக் கூட மறந்து கட்சிப் பணியாற்றி வரும் எத்தனையோ மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளனர். ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் முகத்தைக் கூட நேரில் பார்க்காத ஒருவருக்கு மேயர் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனக்கு வழங்க வேண்டும் என கூறவில்லை. என்னைவிட பல ஆண்டுகள் கட்சிக்காக அயராது உழைத்த விசுவாசிகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கியிருக்கலாம்.
இதை கண்டித்து நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். ஆனால் கட்சி உறுப்பினராக தொடர்கிறேன் என்றார்.
இவர் கடந்த 2006 தேர்தலில் திருச்சி 1 வது தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு தோற்றவர். பின்பு அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications