வட கிழக்கு மாநிலங்களில் 20 ஆண்டுகளில் தாக்கிய மிகப் பெரிய பூகம்பம்
ஷில்லாங்: வடகிழக்கு மாநிலப் பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளில் தாக்கிய மிகப் பெரிய பூகம்பம் இதுதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கிம் மாநிலத்தை மையமாகக் கொண்டு நேற்று மாலை தாக்கிய 6.8 ரிக்டர் அளவிலான பூகம்பத்தால் அந்த மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிக்கிமில் மட்டும் 13 பேர் பலியாகியுள்ளனர். நேபாளத்தில் 5 பேர் இறந்துள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளில் வட கிழக்குப் பிரதேசத்தை தாக்கிய மிகப் பெரிய பூகம்பம் இதுதான். மேலும் இப்பிராந்தியத்தில் நிலநடுக்கங்கள் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிந்றன. கடந்த 2009ம் ஆண்டில் இங்கு மொத்தம் 34 முறை லேசான மற்றும் மிதமான நிலநடுக்கங்கள் தாக்கியுள்ளன. 2008ல் 26 முறை நிலநடுக்கம் தாக்கியுள்ளது. 2006ல் இது 23 ஆக இருந்தது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி 6.4 ரிக்டர் அளவிலான பூகம்பம் இந்திய, மியான்மர் எல்லைப் பகுதியில், மணிப்பூர் மாநிலத்தில் தாக்கியது. அதேபோல 1988ம் ஆண்டு வட கிழக்கில், 6.8 ரிக்டர் அளவிலான பூகம்பம் தாக்கியது.
2000மாவது ஆண்டு அக்டோபர் 11ம் தேதி இதே பகுதியில் 6 ரிக்டர் அளவிலான பூகம்பம் தாக்கியது. மேலும் 2009, செப்டம்பர் 21ல் 6.2 ரிக்டர் அளவிலான பூகம்பம் பூடானைத் தாக்கியது. அதில் 6 பேர் உயிரிழந்தனர்.
இருப்பினும் உலகிலேயே மிக மோசமான பூகம்பத்தை சந்தித்தது ஷில்லாங்தான். 1950ம் ஆண்டு தாக்கிய இந்த பூகம்பத்தின் அளவு 8.5 ரிக்டராக இருந்தது.
அதேபோல 1897ல் ஷில்லாங் பகுதியில் நடந்த மிகப் பெரிய பூகம்பத்திற்கு 1542 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications