நில மோசடி வழக்குகளுக்கு தனி டி.ஐ.ஜி மற்றும் ஐ.ஜிக்கள் நியமனம்
மதுரை: நில மோசடி வழக்குகளை கண்காணிக்க தனியாக டி.ஐ.ஜி மற்றும் ஐ.ஜி. பதவிகளை உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி மாறி அதிமுக ஆட்சி அமைந்த பிறகு திமுகவினர் மீது நில அபகரிப்பு வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுக்க இதுவரை சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன.
மேலும் புகார்கள் அதிகரிக்கவே, நில மோசடிகளை மட்டும் விசாரிக்க காவல்துறையில் தனிப்பிரிவை தமிழக அரசு அமைத்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு டி.எஸ்.பி. தலைமையில் குறைந்தது 7 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில், மோசடியில் ஈடுபட்டதாக கூறி திமுகவைத் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, கே.என். நேரு, என்.கே.கே.பி.ராஜா மற்றும் பல முன்னாள் எம்எல்ஏக்களை இந்த பிரிவு போலீஸ் அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த நிலையில் நில மோசடி வழக்குகளை கண்காணிக்க தனியாக டி.ஐ.ஜி மற்றும் ஐ.ஜி. பதவிகளை உருவாக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
அன்படி, காஞ்சிபுரம் டி.ஐ.ஜி.யாக இருந்த திருஞானம், நில மோசடி பிரிவுகளை விசாரிக்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போல எஸ்.பி. பதவியும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பதவிக்கு இதுவரை யாரையும் அரசு நியமிக்கவில்லை. இவர்கள் சென்னையில் இருப்பார்கள்.
மாநிலம் முழுவதும் உள்ள நில மோசடி வழக்குகளை இவர்கள் கண்காணித்து அரசுக்கு அறிக்கை அனுப்புவார்கள் என்று கூறப்படுகின்றது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications