அதிமுகவின் 3வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு-72 நகராட்சித் தலைவர் வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை: கூட்டணிக் கட்சிகளுடன் ஒருபக்கம் பேசிக் கொண்டே மறுபக்கம் தனது 3வது வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது அதிமுக. இதனால் தேமுதிகவின் நிலை மேலும் சிக்கலாகியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் வழக்கம் போல தனது பாணியில் அதிரடியாக செயல்பட ஆரம்பித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. ஆரம்பத்தில், 10 மாநகராட்சிகளுக்கும் மேயர் பதவிக்கான வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்து கூட்டணிக் கட்சிகளை, குறிப்பாக தேமுதிகவை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இந்த நிலையில் அடுத்த அதிரடியாக 52 நகராட்சித் தலைவர் பதவிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயலலிதா. இதனால் கூட்டணியில் மேலும் நிலைமை குழப்பமானது.
இந்தச் சூழ்நிலையில் நேற்று இடதுசாரிகளை அழைத்து அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மற்றவர்களை இதுவரை கூப்பிடவே இல்லை. இந்த நிலையில் இன்று இன்னொரு அதிரடியாக மேலும் 72 நகராட்சித் தலைவர்கள் பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா.
இது அதிமுக வெளியிட்டுள்ள 3வது வேட்பாளர் பட்டியலாகும். இன்றைய பட்டியலில், வெள்ளக்கோவில்-கந்தசாமி, தாராபுரம்-கலாவதி, காங்கேயம்-மணிமாறன், பொள்ளாச்சி-விஜயக்குமார், மேட்டுப்பாளையம்-சுலோச்சனா, வால்பாறை-செல்வி விஜயராகவன், ஊட்டி-சத்யபாமா, கிருஷ்ணகிரி-தங்கமுத்து, ஓசூர்-பாலகிருஷ்ணன், நாமக்கல்-கரிகாலன், தர்மபுரி-சுமதி, ராசிபுரம்-பாலசுப்ரமணியம், திருச்செங்கோடு-பொன் சரஸ்வதி, குமாரபாளையம்-நாகராஜன், விழுப்புரம்-பாஸ்கரன், திண்டிவனம்-வெங்கடேசன் உள்பட 72 நகராட்சித் தலைவர் பதவிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவின் 3வது வேட்பாளர் பட்டியல் முழு விவரம்:
53. விழுப்புரம் நகராட்சி - ஜி. பாஸ்கரன்
54. திண்டிவனம் நகராட்சி - கே.வி என். வெங்கடேசன்
55. கள்ளக் குறிச்சி நகராட்சி - ஜி. பாலகிருஷ்ணன்
56. கிருஷ்ணகிரி நகராட்சி - கே.ஆர். சி. தங்கமுத்து
57. ஒசூர் நகராட்சி - பி. பாலகிருஷ்ணன் ரெட்டி
58. தருமபுரி நகராட்சி - ஜெ. சுமதி
59. நாமக்கல் நகராட்சி - இரா. கரிகாலன்
60. ராசிபுரம் நகராட்சி - எம். பாலசுப்பிரமணியம்
61. திருச்செங்கோடு நகராட்சி - பொன். சரஸ்வதி
62. குமாரபாளையம் நகராட்சி - ஏ. கே. நாகராஜன்
63. பள்ளிப் பாளையம் நகராட்சி - பி.எஸ். வெள்ளிங்கிரி
64. வெள்ளக்கோவில் நகராட்சி - வி. கந்தசாமி
65.தாராபுரம் நகராட்சி - ஜி. கலாவதி
66. காங்கயம் நகராட்சி - வெங்கு (எ) ஜி. மணிமாறன்
67. மேட்டுப்பாளையம் நகராட்சி - எல். சுலோசனா
68. பொள்ளாச்சி நகராட்சி - எஸ். விஜயகுமார்
69. வால்பாறை நகராட்சி- செல்வி விஜயராஜன்
70. உதகமண்டலம் நகராட்சி - எஸ். சத்தியபாமா
71. குன்னூர் நகராட்சி - சி. கோபாலகிருஷ்ணன்
72. நெல்லியாளம் நகராட்சி - டாக்டர் எம். கருப்பசாமி
73. கூடலூர் நகராட்சி - எம். சரஸ்வதி
74. மணப்பாறை நகராட்சி - ராஜராஜேஸ்வரி
75. துறையூர் நகராட்சி - ஏ. ரவி (எ) ரவிவர்மா
76. துவாக்குடி நகராட்சி - எல். மோகன்தாஸ்
77. பெரம்பலூர் நகராட்சி - சி. ரமேஷ்
78. ஜெயங்கொண்டம் நகராட்சி - ஆர். லெட்சுமிகாந்தம்
79.அரியலூர் நகராட்சி - ஏ.எஸ். எம். கண்ணன்
80. கரூர் நகராட்சி - தமிழ்நாடு எம். செல்வராஜ்
81. குளித்தலை நகராட்சி - எஸ். ரவி
82. கும்பகோணம் நகராட்சி - எஸ். ரெத்னா
83. பட்டுக்கோட்டை நகராட்சி - வி.கே.டி. பாரதி
84. தஞ்சாவூர் நகராட்சி - சாவித்ரி கோபால்
85. சீர்காழி நகராட்சி - எஸ். வளர்மதி
86. மயிலாடுதுறை நகராட்சி - எஸ். முல்லைநாயகி
87. நாகப்பட்டினம் நகராட்சி - ச. மஞ்சுளா
88.வேதாரண்யம் நகராட்சி - ந. மலர்கொடி
89. மன்னார்குடி நகராட்சி - டி. சுதா
90. திருத்துறைப் பூண்டி நகராட்சி - ஏ. லதா
91. திருவாரூர் நகராட்சி - வி. ரவிச்சந்திரன்
92. கூத்தாநல்லூர் நகராட்சி - கே. ஜெயராஜ்
93. புதுக்கோட்டை நகராட்சி - ஆர். கார்த்திக் தொண்டைமான்
94. அறந்தாங்கி நகராட்சி - ராஜேஸ்வரி
95. மேலூர் நகராட்சி - ச. சரவணன்
96.திருமங்கலம் நகராட்சி - உமா விஜயன்
97. உசிலம்பட்டி நகராட்சி - வி.பி. ஆர். பஞ்சம்மாள்
98. திண்டுக்கல் நகராட்சி - வி. மருதராஜ்
99. பழநி நகராட்சி - எம். மகுடீஸ்வரன்
100. கொடைக்கானல் நகராட்சி - வி.எஸ்.கோவிந்தன்
101. ஒட்டன்சத்திரம் நகராட்சி - பி. பழனியம்மாள்
102. விருதுநகர் நகராட்சி - எம். சாந்தி
103. ராஜபாளையம் நகராட்சி - எஸ்.பி. தனலட்சுமி
104. ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி - வி. செந்தில்குமாரி
105. சாத்தூர் நகராட்சி - கே. லதா
106. சிவகாசி நகராட்சி - டாக்டர் ஏ.ஏ.மு. கதிரவன்
107. திருத்தங்கல் நகராட்சி - ஜி. தனலட்சுமி
108. அருப்புக்கோட்டை நகராட்சி - எம். தர்மராஜ்
109. ராமநாதபுரம் நகராட்சி - எஸ்.கே ஜி.சேகர்
110. ராமேஸ்வரம் நகராட்சி - கே. கே. அர்ச்சுனன்
111. கீழக்கரை நகராட்சி - எஸ். ராபியத்துல் கதிரியா
112. பரமக்குடி நகராட்சி - கீர்த்திகா முனியசாமி
113. சங்கரன்கோவில் நகராட்சி - எஸ். முத்துச்செல்வி
114. தென்காசி நகராட்சி - எஸ். பானு
115. கடையநல்லூர் நகராட்சி - எம். முத்துலட்சுமி
116. செங்கோட்டை நகராட்சி - ஆர். மோகன கிருஷ்ணன்
117. புளியங்குடி நகராட்சி - எம். சங்கர பாண்டியன்
118. அம்பாசமுத்திரம் நகராட்சி - பி. செல்வி
119. விக்கிரமசிங்கபுரம் நகராட்சி - மனோன்மணி
120. கோவில்பட்டி நகராட்சி - எஸ். ஜான்சிராணி
121. நாகர்கோவில் நகராட்சி - வி. டாரதி சேம்சன்
122. குளச்சல் நகராட்சி - கே. பெலிக்ஸ் ராஜன்
123. குழித்துறை நகராட்சி - எம். மல்லிகா
124. பத்மநாபபுரம் நகராட்சி - டி. பிரேமலதா
-
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
விஜய்க்கு எதிராக களமிறங்கும் பாமக.. தேர்தலில் போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? எடப்பாடி அறிவிப்பு -
குறிவைத்து அடித்த எடப்பாடி பழனிசாமி.. வீழ்த்தப்பட்ட ஜெயக்குமார்.. அதிமுக 2021 தேர்தல் பிளாஷ்பேக் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications