ரூ 125 கோடி நில அபகரிப்பு: குண்டர் சட்டத்தில் கைதாகிறார் 'லாட்டரி' மார்ட்டின்!
கோவை: நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்களின் பேரில் கைதாகி சிறையிலிருக்கும் லாட்டரி மார்ட்டின் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்.
லாட்டரி அதிபராக இருந்து, திமுக ஆட்சிக் காலத்தில் கருணாநிதி வசனம் எழுதிய இரு படங்களின் தயாரிப்பாளராக மாறியவர் மார்ட்டின்.
ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அவர் பல்வேறு புகார்களில் கைதானார். அவர் கைது மற்றும் விசாரணை குறித்து மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. வன்னியபெருமாள் கோவையில் நிருபர்களிடம் கூறுகையில், "லாட்டரி அதிபர் மார்ட்டின் பல்வேறு வழக்குகளில் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது குற்ற வழக்குகள் உள்பட 10-க் கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவர் அடியாட்கள், ரவுடி கும்பலுடன் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவர் சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம்.
எனவே அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் விரைவில் கைது செய்யப்படுவார். மார்ட்டின் மீது சேலம் போலீசார் 3 வழக்குகளும், கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ரூ.125 கோடி நிலஅபகரிப்பு வழக்கும் தொடர்ந்துள்ளனர். இவை தவிர மேலும் பல வழக்குகளும் அவர் மீது உள்ளன.
நில அபகரிப்பு வழக்கை மந்தமான அளவில் விசாரணை நடத்துவது, குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுவது போன்றவை தொடர்பாக தீவிர கண்காணிப்பு நடைபெறுகிறது.
நில அபகரிப்பு தனிப்பிரிவில் விசாரணையை சரியாக மேற்கொள்ளாத ஒரு இன்ஸ்பெக்டர், 3 சப்-இன்ஸ் பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற அதிகாரிகள் மீதான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
கோவை மாவட்ட குற்றப்பிரிவையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது", என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications