அவமதிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சிலைக்கு பாலாபிஷேகம் செய்த அதிமுக.வினர்
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் அவமதிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சிலையை சுத்தம் செய்த அதிமுக.வினர், சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
ராஜபாளையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தேவர் சிலை அவமதிக்கப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவியது. அதையடுத்து நகரின் முக்கிய பகுதிகளில் இருந்த தேவர் மற்றும் அம்பேத்கார் சிலைகளுக்கு கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் பி.ஏ.சி.ஆர். சாலை மற்றும் வடக்கு மலையம்பட்டி பகுதிகளில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைகள் மீது அவமதிப்பு செய்யப்பட்டது. இந்த தகவல் அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காலையில் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து அ.தி.மு.க. தலைமை நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தபின் அவமதிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சிலைகளை சுத்தம் செய்தனர். அதன்பின் எம்.ஜி.ஆர். சிலைக்கு பாலாபிஷேகம் செய்து வணங்கினர். அதன்பின் இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து அ.தி.மு.க.வினர் கூறியதாவது, அ.தி.மு.க. அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் எண்ணத்தில் இது போன்ற செயல்களில் சிலர் ஈடுபட்டுள்ளனர். தமிழக முதல்வர் மற்றும் கட்சி தலைமை நிர்வாகிகளின் உத்தரவின்பேரில் அமைதி காத்து வருகிறோம், என்றனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications