இது 5வது பட்டியல்..பேரூராட்சித் தலைவர் பதவிக்கான வேட்பாளர்களையும் அறிவித்தார் ஜெ.

உள்ளாட்சித் தேர்தலில் வழக்கம் போல தனது பாணியில் அதிரடியாக செயல்பட ஆரம்பித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. ஆரம்பத்தில், 10 மாநகராட்சிகளுக்கும் மேயர் பதவிக்கான வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்து கூட்டணிக் கட்சிகளை, குறிப்பாக தேமுதிகவை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இந்த நிலையில் அடுத்த அதிரடியாக 52 நகராட்சித் தலைவர் பதவிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயலலிதா. இதனால் கூட்டணியில் மேலும் நிலைமை குழப்பமானது.
இந்த நிலையில் நேற்றே இன்னொரு அதிரடியாக மேலும் 72 நகராட்சித் தலைவர்கள் பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஜெயலலிதா. இது அதிமுக வெளியிட்ட 3-வது வேட்பாளர் பட்டியலாகும். 3-வது பட்டியல் வெளியான பரபரபபு அடங்குவதற்குள் நேற்றே 4-வது பட்டியலை வெளியிட்டார். அதில் 70 பேரூராட்சித் தலைவர்கள் பதவிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் இடம்பெற்றிருந்தது. அடுத்தடுத்து வெளிவந்த வேட்பாளர் பட்டியல்களால் அதிர்ச்சி அடைந்த கூட்டணிக் கட்சிகளை இன்னும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது நேற்று மாலை வெளியான 5-வது பட்டியல். இதில் மேலும் 61 பேரூராட்சித் தலைவர் பதவிக்களுக்கான வேட்பாளர்கள் பெயர் இடம்பெற்றிருந்தது.
இதுவரை எத்தனை?
இதுவரை 131 பேரூராட்சித் தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஜெயலலிதா 10 மாநகராட்சிகளுக்கும் மேயர் வேட்பாளர்களை அறிவித்து விட்டார். அதேபோல மொத்தம் உள்ள 125 நகராட்சித் தலைவர் பதவியிடங்களில் நேற்று மாலை வரை 124 பதவிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். ஒரே ஒரு இடம்தான் தற்போது மீதம் உள்ளது.
6 மேயர் பதவிக்கு பெண் வேட்பாளர்கள்
வேலூர், ஈரோடு, திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 6 இடங்களில் மேயர் பதவிக்கு பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இது தவிர அறிவிக்கப்பட்டுள்ள 124 நகராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளர்களில் 52 பேர் பெண்கள்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகளில் 5 -ம், நாகை மாவட்டத்தில் மொத்த உள்ள 4 நகராட்சிகளும் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளரை வென்றவருக்கு சீட்-வேட்பாளரை மாற்ற கோரி ஆர்ப்பாட்டம்:
இந் நிலையில் வாழப்பாடி பேரூராட்சித் தலைவர் பதவிக்கு அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பகுதி அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வாழப்பாடி பேரூராட்சித் தலைவராக உள்ள செல்விரவி என்பவரை அதிமுக மீண்டும் வேட்பாளராக அறிவித்தது. இதற்கு இப்பகுதி ஜெ. பேரவைச் செயலர் முத்துசாமி தலைமையிலான அதிமுகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
செல்வி ரவி முன்பு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு வென்றார். அவரையே மீண்டும் அதிமுக வேட்பாளராக அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்தும், வேட்பாளரை மாற்றக் கோரியும் முத்துசாமி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications