6வது பட்டியல் வெளியீடு- அனைத்துப் பேரூராட்சிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக!

கூட்டணிக் கட்சிகளை சற்றும் பொருட்படுத்தாமல் தனது வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுக்கொண்டுள்ளது. நேற்று மாலை தனது 6வது பட்டியலை கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டார். இதில் மொத்தம் 398 பேரூராட்சித் தலைவர் பதவிக்கான வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
முதலில் அனைத்து மாநகராட்சி மேயர் பதவிக்கான வேட்பாளர்களை ஜெயலலிதா அறிவித்தார். அடுத்து அனைத்து நகராட்சித் தலைவர் பதவிக்கான வேட்பாளர்களை அறிவித்தார். இப்போது அனைத்து பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்டார்.
இதனால் இந்த மூன்று பதவிகளுக்கும் அதிமுக வேட்பாளர்களே முழுமையாக போட்டியிடுகின்றனர். கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு இடம் கூட தரவில்லை ஜெயலலிதா.
ஏன் இப்படி ஜெயலலிதா தொடர்ந்து பட்டியலை வெளியிட்டு வருகிறார் என்பது புரியாமல் கூட்டணிக் கட்சியினர் கடும் குழப்பத்திலும், கோபத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
நேற்று ஜெயலலிதா வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில், சேலம் புறநகர், நாமக்கல், ஈரோடு மாநகர் மற்றும் புறநகர், திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர், கோவை மாநகர் மற்றும் புறநகர், நீலகிரி, திருச்சி மாநகர் மற்றும் புறநகர், பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர் வடக்கு மற்றும் தெற்கு, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை மாநகர் மற்றும் புறநகர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாநகர், புறநகர் வடக்கு மற்றும் புறநகர் தெற்கு, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கான பேரூராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
மொத்தம் உள்ள 529 பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கும் தற்போது அதிமுக தனது வேட்பாளர்களை அறிவித்து விட்டது. இனி அடுத்து மிச்சமிருப்பது கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகள்தான்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications