ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 நாட்களாக 144 தடை உத்தரவு
ராமநாதபுரம்: பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்று பத்து நாட்கள் ஆகியும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் கிராம மக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி. ராமகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கொடுமாலூர் சென்ற ஜி.ராமகிருஷ்ணன், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தீர்ப்புக்கனியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 25 ஆயிரம் நிதி உதவியை தீர்ப்புக்கனியின் குடும்பத்தினருக்கு வழங்கினார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இம்மானுவேல் சேகரன் குருபூஜைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பரமக்குடிக்கு வருவார்கள் என்று போலீசாருக்கு தெரியும். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டியது அவர்களின் கடமை. ஆனால் அதை விடுத்து துப்பாக்கி சூடு நடத்தியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும். துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு 10 நாட்கள் ஆகியும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஆயிரம் பேரை தேடுகிறோம் என்று போலீசார் இரவு நேரங்களில் கூட வீடு வீடாக செல்கின்றனர். அவர்களை பார்த்து பயந்து ஓடியதில் ஒரு சிலர் உயிரிழக்க நேரிடுகிறது. எனவே 144 தடை உத்தரவை விலக்க வேண்டும்.
குண்டு பாய்ந்து பலியானவர்கள் 6 பேராக இருந்தாலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு நீதி விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தொடர்புடைய காவல்துறையினரை பணிஇடைநீக்கம் செய்யவேண்டும். மதுரை சிந்தாமணியில் துப்பாக்கிசூடு நடத்தியதற்கும் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
பரமக்குடி செல்லும் முன்பாக அவர் துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications