போதைப்பொருள் கடத்தல்: சீனாவில் பாகிஸ்தானியருக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை
ஷாங்காய்: போதைப் பொருள் கடத்திய பாகிஸ்தானியர் செய்யது ஜஹித் ஹுசைன் ஷா என்பவருக்கு விஷ ஊசி போட்டு சீனா மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு போதைப்பொருள் கடத்தியதற்காக பாகிஸ்தானியரான செய்யது ஜஹித் ஹுசைன் ஷாவை (35) சீன போலீசார் கைது செய்தனர். அவர் மீதான குற்றம் கடந்த ஆண்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவருடன் கைதான 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அதன்படி நேற்று ஷாவுக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ஷாவின் மரண தண்டனையை நிறுத்தக் கோரி அவரது குடும்பத்தாரும், மனித உரிமை அமைப்பினரும் சீன அரசை வலியுறுத்தினர். ஷாவைக் காப்பாற்றுமாறு பாகிஸ்தான் அரசையும் கேட்டுக் கொண்டனர். ஆனால் இரண்டு நாட்டு அரசுகளும் எந்த பதிலும் அளிக்கவில்லை.
போதைப் பொருள் குற்றத்திற்காக ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவது என்பது உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகளை மீறுவதாகும் என்று பொதுமன்னிப்பு சபையின் ஆசிய-பசிபிக் தலைவர் சாம் ஜரிபி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அரசு ஒரு போன் செய்திருந்தால் இந்நேரம் ஷாவின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டிருக்கும் என்று ஆசிய மனித உரிமை கழகம் தெரிவித்துள்ளது.
ஷாவை செய்யாத குற்றத்திற்காக தண்டித்துள்ளார்கள் என்று அவரது சகோதரி தஸ்னீம் பாத்திமா தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications