8 மாநகராட்சி கவுன்சிலர் பதவி வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டார் ஜெ
சென்னை: சென்னை, திருச்சி நீங்கலாக எஞ்சியுள்ள 8 மாநகராட்சிகளுக்கு கவுன்சிலர் பதவிக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா நேற்றிரவு வெளியிட்டார்.
அதில் மதுரை, கோவை மாநகராட்சிகளுக்கு தலா 100 வேட்பாளர்கள், சேலம், ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி மாநகராட்சிகளுக்கு தலா 60 வேட்பாளர்கள், திருநெல்வேலி மாநகராட்சிக்கு 55 வேட்பாளர்கள் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவி-வழக்கம்போல் வேட்பாளர்கள் மாற்றம்:
அதிமுகவின் இலக்கணப்படி, காஞ்சீபுரம் மாவட்டம், வேலூர் மாநகர், கோவை புறநகர், நீலகிரி, தஞ்சாவூர் தெற்கு, திருவாரூர், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில நகராட்சிகளில் தலைவர் பதவிக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
காஞ்சீபுரம் மத்திய மாவட்டத்தில் செங்கல்பட்டு நகராட்சி புதிய வேட்பாளராக சி.வி.என்.குமாரசாமி (நகர அ.தி.மு.க. செயலாளர்) அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதே போல காஞ்சீபுரம் கிழக்கு மாவட்டம், வேலூர் புறநகர், கடலூர் மேற்கு, விழுப்புரம் தெற்கு, தருமபுரி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஒருசில பேரூராட்சிகளில் தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
காஞ்சீபுரம் கிழக்கு மாவட்டத்தில் சிட்லபாக்கம் பேரூராட்சி புதிய வேட்பாளராக ஆர்.மோகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவிடம் லிஸ்ட் கொடுத்த பார்வர்டு பிளாக்:
இந் நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ள தொகுதிகள் அடங்கிய பட்டியலை அதிமுக பேச்சுவார்த்தைக் குழுவிடம் தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சி அளித்துள்ளது.
அதிமுக பேச்சுவார்த்தைக் குழுவிடம் இந்தப் பட்டியலை பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன், மத்திய குழு உறுப்பினர் ராஜசேகரன், சென்னை மாவட்ட செயலாளர் பாலாஜி, மாநில குழு உறுப்பினர் அல்லிக்கொடி ஆகியோர் அளித்தனர்.
தென் மாவட்டங்களின் சில நகராட்சிகளின் தலைவர் பதவிகள், சென்னையில் சில இடங்கள் என தாங்கள் விரும்பும் இடங்களை அதில் பட்டியலிட்டுள்ளது பார்வர்டு பிளாக்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications