ஏற்காட்டில் துப்பாக்கிகளுடன் 7 பேர் ஊடுறுவல்- நக்சல்கள் இல்லை என போலீஸ் தகவல்
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு மலையடிவாரப் பகுதியில் குப்பனூர் என்ற கிராமத்திற்கு அருகே மலைக்குகள், துப்பாக்கிகளுடன் 7 பேர் ஊடுறுவியுள்ளதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் குதித்தனர். இதில் நக்சலைட் ஊடுறுவல் எதுவும் இல்லை என தெரிய வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்காடு மலையடிவாரத்தில் உள்ள கிராமம் குப்பனூர். இந்தக் கிராமத்திற்கு அருகே 7 பேர் துப்பாக்கிகளுடன் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் மலைக்குள் போய் விட்டனர். இதைப் பார்த்த கிராம மக்கள் பீதியடைந்தனர். வந்தவர்கள் நக்சலைட்களாக இருக்கலாம் என அச்சமடைந்த அவர்கள் உடனடியாக சேலம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்திற்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின் பேரில் 50க்கும் மேற்பட்ட போலீஸார், வருவாய்த்துறையினர், வனத்துறையினர் குப்பனூர் விரைந்தனர். தேடுதல் வேட்டைக்குப் பின்னர் போலீஸ் தரப்பில் கூறுகையில், நக்சலைட் ஊடுறுவல் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. நிச்சயம் நக்சலைட்கள் யாரும் வரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications