கறுப்புப் பண விவகாரம்: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வெவ்வேறு தீர்ப்பு
டெல்லி: வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவது தொடர்பான விவகாரத்தில் தனி விசாரணைக் குழுவை அமைக்கும் விஷயத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தனித் தனியான தீர்ப்பை வழங்கியதால், அது தொடர்பான முடிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கறுப்புப் பண விவகாரத்தில் விசாரணையை மேற்பார்வையிட 2 ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்திய வெளிநாட்டு உளவுப் பிரிவான ரா அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேர் தனி விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்தத் தீர்ப்பில் மாறுதல் கோரி மத்திய அரசு மனுத் தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை நீதிபதி கபீர், நீதிபதி எஸ்.எஸ்.நிஜ்ஜர் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் விசாரித்து வந்தனர்.
மத்திய அரசு தாக்கல் செய்த இந்த மனு விசாரணைக்கு ஏற்றது தான் என நீதிபதி கபீரும், அதை ஏற்க முடியாது என்று நீதிபதி நிஜ்ஜரும் தீர்ப்பளித்தனர்.
இதையடுத்து இந்த வழக்கை அதிக எண்ணிக்கையிலான நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications