உள்ளாட்சித் தேர்தலில் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கான கட்டுப்பாடுகள் அறிவிப்பு
மதுரை: தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு கடும் கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் கமிஷன் விதித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் வரும் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடக்கிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் கடும் கட்டுபாடுகளை மாநில தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
1.எந்த வேட்பாளரும் சாதிமத பிரச்சனை உருவாகும் வகையில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட கூடாது.
2.வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது.
3.அரசு, தனியார் நிலம், கட்டிடம், சுவர்களில் விளம்பரம் செய்யக்கூடாது. சுவரொட்டிகள் ஒட்டக் கூடாது.
4.ஒரு கட்சியின் கூட்டம் நடைபெறும் இடத்தின் வழியாக, மற்றொரு கட்சி ஊர்வலம் நடத்தக் கூடாது.
5.வேட்பாளர் முன் அனுமதி பெற்று பிரசாரம் செய்ய வேண்டும். பிரசாரம் செய்வதற்கு செல்லும் இடம் குறித்து முன்னதாகவே முடிவு செய்து அனுமதி பெற வேண்டும். தாமாகவே இந்த முடிவை மாற்றக் கூடாது.
6.ஊர்வலம் பிரசாரத்துக்கு அனுமதி பெற்று செல்லும் இடங்களில் போக்குவரத்து இடையூறு செய்யக் கூடாது.
7.போலீசாரின் அறிவுரைகளையும், உத்தரவுகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
8.கொடி, தோரணங்கள், பேனர்கள், போன்றவற்றை பிரசாரம், ஊர்வலம், பொதுக் கூட்டத்தின் போது மட்டும் அனுமதி பெற்று அமைக்கலாம். தேவையில்லாமல் இவற்றை பயன்படுத்தக் கூடாது.
9.மற்றொரு கட்சி தலைவரையோ, வேட்பாளரையோ அவமதிக்கும் வகையில் கொடும்பாவி எரித்தல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.
10.அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பிரசார கூட்டம் நடத்த வேண்டும்.
11.அரசு இடங்களை கட்சி சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது.
12.தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது முதல், அமைச்சர்களோ, அதிகாரிகளோ, அவர்களுடைய பிரதிநிதிகளோ, அரசு உதவிகளையோ, மானியங்களையோ வழங்க கூடாது.
13.உள்ளாட்சி பிரசாரத்துக்கு செல்லும் அமைச்சர்கள் அரசு வாகனங்களை பயன்படுத்தக் கூடாது.
14.அரசு திட்டங்களை துவங்குதல், சாலை, குடிநீர் வசதி, தெருவிளக்கு அமைத்தல் போன்ற பணிகளை செய்ய கூடாது.
15.ஓட்டுப் போட பணம் கொடுப்பது, வாக்காளர்களை மிரட்டுதல், ஆள்மாறாட்டம் செய்து ஓட்டுப் போடுவது போன்றவை கடும் குற்றமாக கருதப்பட்டு, வழக்கு பதியப்படும்.
16.ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள், வாங்குபவர்கள் இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
17.குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டு வரை ஜெயில் தண்டனை கிடைக்கும்.
18.வாக்கு சாவடியில் இருந்து 100 அடி தூரத்துக்குள் நின்று ஆதரவு கேட்பதும், வாக்காளர்களை ஓட்டுப்போட வாகனங்களில் அழைத்து செல்வதும் ஊழல் குற்றமாக கருதப்படும்.
19.ஓட்டு போடும் வாக்காளர்கள், அனுமதி பெற்ற தேர்தல் ஏஜெண்டுகள், தவிர அரசியல் பிரமுகர்கள் யாரும் ஓட்டுச் சாவடிக்குள் நுழையக் கூடாது.
20.ஓட்டு போடுவதற்கான புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப்களை அரசியல் கட்சிகள் கொடுக்க கூடாது.
21.மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தல் ஊழியர்களே ஒரு வாரத்துக்கு முன்பு வீடு வீடாக சென்று பூத் சிலிப்களை கொடுப்பார்கள்.
22.வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.
23.தேர்தல் ஆணையத்தின் விதிகளை கடைபிடிக்காத வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும்.
24.வாக்காளர் பட்டியலில் பெயர் படம் இருந்தாலும், மத்திய தேர்தல் ஆணையம் வழங்கி உள்ள வாக்காளர் அடையாள அட்டை அல்லது மாநில தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளில் ஒன்றும் இருந்தால் மட்டுமே ஓட்டு போட முடியும்.
இவ்வாறு தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications