மதுரை மாநகராட்சி மேயர்-திமுக வேட்பாளர் பாக்கியநாதன்; சேலத்துக்கு பனைமரத்துபட்டி ராஜேந்திரன்?
சென்னை: திமுக சார்பில் மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளராக பாக்கியநாதன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் திமுக மதுரை மாநகராட்சி மற்றும் 28 நகராட்சிகளுக்கான 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி திமுக வேட்பாளராக மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு மிக நெருக்கமான கவுஸ் பாட்சா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சியின் அடிமட்டத் தொண்டரான பாக்கியநாதன் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் திமுகவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் 28 நகராட்சித் தலைவர் பதவிகளுக்கான திமுக வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி திண்டுக்கல் நகராட்சிக்கு திமுக மாநில மகளிர் அணித் தலைவியான நூர்ஜஹானும், தென்காசிக்கு சீதா லட்சுமியும், செங்கோட்டைக்கு ரஹீமும், வீ.கே.புரத்துக்கு ராஜம் ஜானும், தேவகோட்டைக்கு ஜோன் ரூசோவும், காரைக்குடிக்கு பாண்டி மீனாளும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பாவும், தேமுதிக சார்பில் கவியரசும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுகவின் சாதாரண தொண்டரும் முன்னாள் கவுன்சிலருமான போ. பாக்கியநாதனை, திமுக தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி நிறுத்தியிருப்பது கட்சி தொண்டர்களை உற்சாகம் கொள்ளச் செய்துள்ளது.
இதன்மூலம் அழகிரிக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே பதவிகள் பெற முடியும், கட்சியின் சாதாரண தொண்டர்களுக்கு கட்சியில் மரியாதையில்லை என்ற குறையை அழகிரி போக்க முயன்றுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், சர்வ பலம் பொறுந்திய ராஜன் செல்லப்பாவை எதிர்க்கும் அளவுக்கு பாக்கியநாதனுக்கு பலம் உண்டா என்ற சந்தேகமும் திமுகவினரிடையே எழுந்துள்ளது.
மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளராக, முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கத்தை நிறுத்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முயன்றார். ஆனால், அதைத் தடுத்துவிட்ட அழகிரி, பாக்கியநாதனுக்கு சீட் பெற்றுத் தந்துள்ளார்.
சேலம் வேட்பாளர் பனைமரத்துபட்டி ராஜேந்திரன்?:
சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சமீபத்தில் தான் சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையானார். இதனால் அந்த மாநகராட்சியின் மேயர் வேட்பாளரை திமுக இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் சேலம் மேயர் வேட்பாளராக பனைமரத்துபட்டி ராஜேந்திரனை அறிவிக்க திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால் வீரபாண்டி ஆறுமுகம் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் இழுபறி நீடிப்பதாகக் கூறப்படுகிறது.
அதே போல திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கான வேட்பாளரையும் திமுக அறிவிக்க வேண்டியுள்ளது.
விடுபட்ட இடங்களுக்கான மேயர் மற்றும் நகராட்சித் தலைவர்கள் வேட்பாளர்கள் பட்டியல், இன்றோ, நாளையோ இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும். திங்கட்கிழமை முதல் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்று தெரிகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications