பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது-சிறையில் அடைப்பு
மதுரை: மதுரை பிரபல ரவுடியான வரிச்சியூர் செல்வம், மதுரை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மதுரை அருகே வரிச்சியூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். பிரபல ரவுடியான செல்வம், நடிகர் ரித்தீஷின் ஆதரவாளர். பல வழக்குகளில் தொடர்புடைய இவரை கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் என்கவுன்டரில் சுட்டுக் கொல்ல போலீசார் திட்டமிட்டனர்.
ஆனால் போலீசாரிடம் அவ்வப்போது தப்பிய இவர், பல இடங்களில் தலைமறைவாகி இருந்தார். பெங்களூரில் தலைமறைவாக இருந்து வந்தார். கடந்த ஆட்சியில் தி.மு.க. எம்.பி. ரித்தீஷ் ஆதரவோடு வலம் வந்தார்.
தற்போது மீண்டும் அ.தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததும், செல்வத்தை மீண்டும் கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். இந்நிலையில், வரிச்சியூரில் உள்ள முதல் மனைவி முத்துலட்சுமியின் வீட்டிற்கு வந்த செல்வத்தை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். செல்வத்தின் மீதான மதுரை பெண் எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தவிட்டார். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார் செல்வம்.












Click it and Unblock the Notifications