அதிமுகவுடன் உடன்பாடு இல்லை-தேமுதிகவுடன் இணைந்து செயல்பட இடதுசாரிகள் திட்டம்

தேமுதிகவுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் இணைந்து தேமுதிக, இடதுசாரிகள், புதிய தமிழகம், சரத்குமார் கட்சி உள்ளிட்டவை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு திமுக கூட்டணியை வீழ்த்தின. இதனால் உள்ளாட்சித் தேர்தலிலும் இவர்கள் இணைந்தே போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப கூட்டணிக் கட்சியினரும் உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணி தொடர்கிறது என்று பேசி வந்தனர்.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அதிமுக தரப்பிலிருந்து அத்தனை உள்ளாட்சி இடங்களுக்கும் வேட்பாளர்களை அறிவித்து கதவை மூடி விட்டனர். இதனால் எங்கு போவது, என்ன செய்வது என்று தெரியாமல் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தவித்துப் போய் விட்டன.
பின்னர் அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு, தேமுதிக, புதிய தமிழகம், சிபிஎம் ஆகியவை தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர்களை அறிவித்தன. சிபிஐ மட்டும் யோசித்துக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது தேமுதிகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தால் என்ன என்ற ரீதியில் இடதுசாரிகள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து இன்றுசிபிஎம் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனும், சிபிஐ செயலாளர் தா.பாண்டியனும் அவசர ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக்குப் பின்னர் தேமுதிகவுடன் இணைந்து செயல்படுவது குறித்து இணக்கமான அறிகுறிகள் தென்படுவதால் அதுகுறித்து பேசி தீர்மானிக்கப்படும் என்றார்.
இது நடந்தால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் ஒரே கூட்டணியாக இந்த கூட்டணி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற முக்கியக் கட்சிகள் அனைத்தும் தனித்துப் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications