தேர்தல் விதிமுறைகளை மீறிவிட்டார் ஜெயலலிதா: கருணாநிதி குற்றச்சாட்டு

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளுக்குக் கூடுதல் குடிநீர் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கிறார். அந்த மக்களுக்குக் கூடுதல் குடிநீர் கிடைப்பது மகிழ்ச்சி தான். ஆனால் உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு இந்த அறிவிப்பை முதல்வர் செய்துள்ளார். அது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயலா, அல்லவா?
தேர்தல் முடிவு வெளியாகும்வரை அரசின் நலத் திட்டங்களுக்குத் தடை என்றும், தேர்தல் விதிகளை மீறுபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநிலத் தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
இதைப்போல காவல் துறையிலும், பள்ளிக் கல்வித் துறையிலும் ஏராளமான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். இத்தகைய விதி மீறல்களுக்கு தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
கூடங்குளம் அணுமின் திட்டப் பணிகளை நிறுத்தி வைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தண்டனையை ரத்து செய்ய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று பலரும் வேண்டுகோள் விடுத்த பிறகும் அது தொடர்பாக அறிவிப்பு எதுவும் வரவில்லை.
கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றிய தீர்மானத்தில் கூட அணுமின் நிலையம் வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. மக்கள் பயத்தில் இருந்து விடுபடும் வரை திட்டப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டுமென்றுதான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
திமுக மகளிர் அணியைச் சேர்ந்த ஒருவர் கொலை வழக்கில் மு.க.ஸ்டாலினைத் தொடர்புபடுத்தி ஆளுங்கட்சி தொலைக்காட்சியில் பிரசாரம் செய்வது தவறு என்று கொலையானவரின் கணவரே சொல்லியிருக்கிறார்.
மு.க.ஸ்டாலினுக்கும், அவரது உதவியாளருக்கும் இந்த வழக்கில் தொடர்பு எதுவும் இல்லை. ஆளுங்கட்சியினர் கொடுத்த வற்புறுத்தலினால் தான் பொய் புகார் கொடுத்தேன் என்றும் உயர்நீதிமன்றத்திலேயே தெரிவித்துள்ளார்.
இந்த ஆட்சியில் காவல்துறையினர் எந்த அளவிற்கு எதிர்க்கட்சியினர் மீது வழக்கு போடத் தவிக்கிறார்கள் என்பதற்கு இதுவே சரியான உதாரணம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications