நேபாள விமான விபத்தில் 8 தமிழ் நாட்டவர் பலி- கருணாநிதி, தலைவர்கள் வேதனை
சென்னை: நேபாள விமான விபத்தில் திருச்சியைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
நேபாள விமான விபத்தில் 8 தமிழர்கள் உள்பட 19 பேர் பலியானார்கள். இது குறித்து பல்வேறு தலைவர்களும் அதிர்ச்சியும், வேதனையும் வெளியிட்டுள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
எவரெஸ்ட் சிகரத்தைச் சுற்றிப் பார்க்க தனியார் விமானத்தில் சென்ற 19 பேர் விபத்தில் பலியான செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். பலியானவர்களில் 8 பேர் திருச்சியைச் சேர்ந்த கட்டுமானச் சங்க உறுப்பினர்கள் என்பது என் வேதனையை அதிகப்படுத்தியது.
திமுகவைச் சேர்ந்த புதுகோட்டை ரகுபதி, திருச்சி செல்வராஜ் ஆகியோரின் உறவினர்கள் சிலரும் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தனர் என்பது பெரிதும் வேதனை அளிக்கும் செய்தியாகும். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள செய்தியில்,
பருவநிலை காரணமாக நேபாளத்தில் விமான விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் திருச்சியைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரத்தால் வாடும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிதுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications