உள்ளாட்சித் தேர்தலுக்கான காங். வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடித்து வரும் தங்கபாலு கூறியுள்ளார். இதனால் சத்தியமூர்த்தி பவனில் பல்வேறு போராட்டக் காட்சிகள் அரங்கேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய பல்வேறு கோஷ்டிகளின் தலைவர்கள் அடங்கிய 13 பேர் கொண்ட பட்டியலை காங்கிரஸ் மேலிடம் அமைத்துள்ளது. இந்தக் குழுவுக்கு தங்கபாலு தலைவராக உள்ளார்.
இந்த ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. அதில், குழுவில் இடம் பெற்றுள்ள கோஷ்டித் தலைவர்களான ஜி.கே.வாசன், ஈவிகேஎஸ் இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ், ஜெயந்தி நடராஜன், யசோதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் குழுவினர் கூடி வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கபாலு, வேட்பாளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து சத்தியமூர்த்தி பவனில் பல்வேறு கோஷ்டிகளின் போராட்டக் காட்சிகள் அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு நிலவுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications