'ஜீன்ஸ்' பேண்ட்டில் வந்து ஆலோசனையில் பங்கேற்ற இளைஞர் காங். தலைவர் யுவராஜா!

காங்கிரஸ் என்றவுடன் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கோஷ்டிப் பூசல்தான் என்றாலும் கூட கதர்தான் காங்கிரஸின் அடையாளமாக இருக்கிறது. நாட்டில் கதர் ஆடை அணிவதை காங்கிரஸ்காரர்கள்தான் ஓரளவாவது கடைப்பிடித்து வருகிறார்கள்.
கதரும், காங்கிரஸும் பிரித்துப் பார்க்க முடியாத அம்சங்கள். அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் ஜீன்ஸ் பேண்ட்டுடன் மாநில நிர்வாகி ஒருவர் கலந்து கொண்டது முனுமுனுப்பை கிளப்பியுள்ளது.
தமிழக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக பல்வேறு கோஷ்டித் தலைவர்களை உள்ளடக்கிய 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு நேற்று மாலை கூடி விவாதித்தது. இன்றும் இக்குழுக் கூட்டம் நடந்தது. காங்கிரஸ் தேசிய செயலாளரும், மேலிட பார்வையாளருமான கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில், தங்கபாலு, ஜி.கே.வாசன், ஜெயந்திநடராஜன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், எஸ். ஆர்.பாலசுப்பிரமணியம், முன்னாள் தலைவர் குமரி அனந்தன், எம்.பி.க்கள் கிருஷ்ணசாமி, ஜே.எம்.ஆரூண், கோபிநாத் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பீட்டர் அல்போன்ஸ், யசோதா மற்றும் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். ப.சிதம்பரம் மட்டும் கூட்டத்திலிருந்து மிஸ்ஸிங்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்திருந்த அத்தனை ஆண் தலைவர்களும் கதராடையில் வந்திருந்தனர். யுவராஜா மட்டும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கலக்கலாக வந்திருந்தார். இது பலரது கண்களையும் உறுத்தியது. காங்கிஸ் கட்சிக்கும், ஜீன்ஸ் பேண்ட்டுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று தொண்டர்களிடையே முனுமுனுப்பு எழுந்தது.
ஒரு வேளை 'இளைஞர்' காங்கிரஸ் தலைவர் என்பதால் ஜீன்ஸ் போட்டுக் கொண்டு வந்து விட்டாரா 'யுவ'ராஜா...!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications