உள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவுடன் குடியரசுக் கட்சி, பார்வர்ட் பிளாக், முஸ்லீம் லீக் தொகுதி உடன்பாடு

ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குறித்து அதிமுக எந்தத் தகவலும் வெளியிடவில்லை. இதையடுத்து தனித்துப் போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்டார் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்.
இது குறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்ககையில் கூறியிருப்பதாவது:
17.10.2011, 19.10.2011 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள தமிழ்நாடு உள்ளாட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு இடப்பங்கீடு குறித்து, அதிமுகவுக்கும், தோழமைக் கட்சியான டாக்டர் செ.கு.தமிழரசன் எம்.எல்.ஏ.வை தலைவராகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்திய குடியரசுக் கட்சிக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அதே போல், அதிமுகவுக்கும் தோழமைக் கட்சியான பி.வி.கதிரவனை தமிழ் மாநில பொதுச் செயலாளராகக் கொண்டு செயல்பட்டு வரும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு இடையேயும்,
எஸ்.ஷேக் தாவூதை தலைவராகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சிக்கு இடையேயும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், அதிமுகவுடன் விடாமல் பேச்சு நடத்தி வந்த தா.பாண்டியனை மாநிலச் செயலாளராக் கொண்டு செயல்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குறித்து இதில் எந்தத் தகவலும் கூறப்படவில்லை.
இந் நிலையில் தான் இந்திய கம்யூனிஸ்ட் தனித்துப் போட்டி என்ற அறிவிப்பு வெளியானது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications